Header image alt text

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 375 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 360 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 06 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read more

புள்ளடியிட்ட வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இளைஞர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய, தல்காஸ்பேவில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற எல்பிட்டியா பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குச் சாவடிகளுக்குள் வாக்குச் சீட்டுகள் அல்லது புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளை புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறலாகும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவு செய்ய சுமார் 7 இலட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கிடைக்கப்பெற்ற சுமார் 7இலட்சம் விண்ணப்பங்களில் தகுதியானவர்களைத் தெரிவுசெய்யும் பரிசீலனைகள் இடம்பெற்றுவருவதாக அந்த ஆணைக் குழு மேலும் தெரிவித்துள்ளது. Read more

பல்கலைகழக கல்விசாரா பணியாளர்கள் கடந்த ஒரு மாதகாலமாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத்தலைவர் டம்மிக எஸ்.பிரியன்த இதனை தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினைகளை முன்னிறுத்த கடந்த 34 நாட்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய ஒரு மாத காலப்பகுதியில் வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 23 ஆயிரத்து 372 வாக்குகளை பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியது.

ஐக்கிய தேசிய கட்சி 10 ஆயிரத்து 113 வாக்குகளை பெற்று 7ஆசனங்களை கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆயிரத்து 273 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியது. ஜே.வி.பி 2 ஆயிரத்து 435 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. Read more