ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு நாளை முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை ஏற்று கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் ஆட்சேபனையை முன்வைக்க நாளை முற்பகல் 11 மணிமுதல் 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவர் சார்பில், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி என்ற அணியில் சுயேட்சையாக சிவாஜிங்கம் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.