ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கு உதவி செய்தல், கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குதல் அல்லது மௌனமாக இருத்தல் ஆகிய தீர்மானங்களை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்க இருந்ததாகவும், எவ்வாறாயினும் கட்சித் தொண்டர்களின் அடையாளத்தை விற்று செயற்பட முடியாது என குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் சார்பில் சிந்தித்து மக்கள் விரும்பும் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இறுதியில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க கட்சி உடன்பாட்டுக்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.