திருகோணமலை – மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியையும் மகளையும் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ரயில் தண்டவாளத்துக்கு சென்றவேளை ரயில் மோதியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை – அபயபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய என். ஜோஹான் ஜோசப் என தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.