ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் ஶ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத் தாகியுள்ளது.