தபால் மூல வாக்களிப்பில் தமிழ் மக்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. 5 கட்சிகளின் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போதே, மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், எஸ்.சதானந்தம், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.சிறிகாந்தா, ஹென்ரி மகேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Read more
2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளை (31) முதல் ஆரம்பமாகிறது.
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (29) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.