போலி வீசாவை சமர்ப்பித்து ஈரானிய எல்லைகளின் ஊடாக ஐரோப்பிய நாடான அல்பேனியாவிற்கு செல்ல முயன்ற இரண்டு இலங்கையர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து ஈரானின் டெஹேரான் நகரிற்கு செல்வதற்காக இரு விமான பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இச்சந்தேக நபர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது