Header image alt text

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கனேடியே உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் உயர்ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். Read more

யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபராக மகேஷ் சேனாரத்ன பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகத்தில் இன்றையதினம் முற்பகல் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே அவர் காவல்துறை தலைமையக்கத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின், மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு கரினா கோல்ட் ஆகியோர் இன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். வெடிக்காத கண்ணிவெடிகள் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள உள்ளுர் மக்கள் தங்கள் நிலங்களில் வாழ்வதையும் வேலை செய்வதையும் தடுக்கின்றன. Read more

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். Read more

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, Read more

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்முத் குரேஸி, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.

வெளிவிவகாரஅமைச்சில் இன்றுகாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக வளாகத்தில் தாய் நாட்டுக்கான இராணுவம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித் பிரசன்ன உணவு தவிர்ப்பினை முன்னெடுத்துள்ளார்.

இன்று முற்பகல் முதல் அவர் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அலுவலர் ஒருவர் கடத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Read more

போலி வீசாவை சமர்ப்பித்து ஈரானிய எல்லைகளின் ஊடாக ஐரோப்பிய நாடான அல்பேனியாவிற்கு செல்ல முயன்ற இரண்டு இலங்கையர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து ஈரானின் டெஹேரான் நகரிற்கு செல்வதற்காக இரு விமான பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையால் ஆறு பிரதேச செயலகங்களில் வசிக்கும் 1,050 குடும்பங்களைச் சேர்ந்த 3,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரெனவும் இன்று பகல் மாவட்டச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் இருந்த மாட்டுடன் மோதி யாழ்ப்பாணத்தில் இருந்து Read more