இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின், மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு கரினா கோல்ட் ஆகியோர் இன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். வெடிக்காத கண்ணிவெடிகள் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள உள்ளுர் மக்கள் தங்கள் நிலங்களில் வாழ்வதையும் வேலை செய்வதையும் தடுக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் இந்த ஆயுதங்களால் 7,000 பேர் தங்கள் உயிர்களை இழக்கின்றனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர்.

அதனால்தான், சாசனத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் உலகமயப்படுத்துவதிலும், தீர்மானம் எடுத்தல் செயற்பாடுகளிலும் பால்நிலை சமத்துவம் குறித்து கவனம் செலுத்திய கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்காக நேற்றைய தினம் ஒட்டாவா உடன்படிக்கைக்கான தமது உறுதிப்பாட்டினை கனடா மீளுறுதி செய்தது.

கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு ஆதரவளிப்பதற்கு 83 மில்லியன் டொலர்களை அறிவித்தது. கண்ணி வெடிகள் அகற்றலின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபடுவதை உறுதி செய்வது கனடாவுக்கு முன்னுரிமையானதாகும.

அவ்வாறு செய்வது அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது, மேலும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதில் மாற்றத்தின் முகவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகளை மக்களுக்கு வழங்குகிறது.

பணிவலுவில் அரைப்பங்கிலான பெண்களை உள்ளடக்கிய, இலங்கையின் வடக்கில் கண்ணிவெடி அகற்றலுக்கான 2 மில்லியன் டொலர்களும் இந்த புதிய நிதியுதவியில் உள்ளடங்குகின்றது. ஈராக்கில், இந்த பணியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு முன்முயற்சியுடன் டேஷிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க 2 மில்லியன் டொலர்களை நாம் வழங்குவோம்.

கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சர்வதேச பிரசாரத்திற்கான முக்கியமான நிறுவன ஆதரவை வழங்க கனடா 4.3 மில்லியன் டாலர்களை வழங்க கனடா உறுதி பூண்டுள்ளது, இந்த நிதி அரசுகள் தமது கடமைகளை எட்டுவதற்கும், சாசனத்தை உலகமயப்படுத்துவதற்கும் உதவி செய்யும்; என தெரிவிக்கப்பட்டுள்ளது.