Header image alt text

கிளிநொச்சி மாவட்ட சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் க.சுமன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபுள்யூ.டீ லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக இன்று தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.

1994 முதல் 1999 வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைகழகத்தில் துணை வேந்தராக இருந்த அவர் இலங்கையில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணராவார். Read more

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெள்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை

கைதுசெய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே, Read more

திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமா பெய்யும் மழையின் நிமித்தம் 1485 குடும்பங்களைச்சேர்ந்த 5478 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று பகல் அறிவித்துள்ளது.

திருகோணமலையில் வெருகல், கிண்ணியா, கந்தளாய், குச்சவெளி, சேருவில மற்றும் தம்பலகாமம் உட்பட்ட பிரதேசங்கள் அதிக பாதிப்புக்கு முகம்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்துள்ளது. Read more

வெளிநாடுகளிலிருந்து அலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் மிஸ்ட் கோல் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான அழைப்புகள் தொடர்பில் 1700 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் வாயிலாக அறியத்தருமாறு அந்த ஆணைக்குழு கூறியுள்ளது. Read more

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பளைய மாணவனுமான

ரவிச்சந்திரன் ரிதுசன் (வயது 24) என்பவர் முரசுமோட்டை இரண்டாம் கட்டை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியதும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவராக, சபநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனவரி 03ஆம் திகதி சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, Read more

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவின் வழக்கு தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மானிப்பாய் நவாலி வடக்கைச் சேர்ந்த சண்முகராஜா அம்பிகைபாலன் (வயது 64) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் மருந்து எடுத்து குணமாகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்ற இடத்தில் மயக்கமடைந்துள்ளார். Read more