Header image alt text

சுவிஸ்லாந்துக்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக ஆ.பிறேமானந்தன்(ஆனந்தன்), செயலாளராக ஜீ.சண்முகராசா, நிதிப் பொறுப்பாளராக ம.முருகதாஸ் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக சி.ருசாந்த், சி.பாபு, க.கணேசலிங்கம், இ.இராஜேந்திரன் ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும், ஐ.தே.கட்சியின் தலைமைத்துவ பொறுப்புக்களில் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவும் நீடிக்கவுள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்ற குழுவும் இணைந்தே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். Read more

இராஜாங்க அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, புதிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கான மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து இன்றையதினம் சந்தித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு எப்போதும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவு இருக்கும் என்றும், எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் தூதுவர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. Read more

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் ரசாக், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் மற்றும் ஆலோசகரான அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

இலங்கையின் அனைத்து ஆசிரியர் சபை ஊழியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்காக தேசிய கல்வியற்கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மேம்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட ´சுபீட்ச தொலைநோக்கு´ என்ற கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட ஞானத்தைக்கொண்ட பிரஜை, அறிவைக் கொண்ட சமூகம் ஒன்றுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் Read more

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரியவை பதவி விலக வேண்டாம் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர்கள் இக் கோரிக்கையை மஹிந்த தேசப்பிரியவிடம் விடுத்துள்ளனர். Read more

இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உண்மையான விடயங்களை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை எதிர்நோக்கிய பெண் அதிகாரியிடம் இருந்து இதுவரையில் எந்தவித தகவலையும் பெறமுடியாமை, இது தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

தியத்தலாவ – பண்டாரவளை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ -பண்டாரவளை ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே மலையகத்திக்கான ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.