நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும். Read more
நிலவும் மழையுடனான காலநிலை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த தாய்நாட்டுக்கான இராணுவம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜீ. மெனேல்லா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.
முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்துள்ளது.
யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகாமையில் இருந்து, இன்று காலை, மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.