இலங்கைக்கான மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து இன்றையதினம் சந்தித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு எப்போதும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவு இருக்கும் என்றும், எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் தூதுவர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேற்படி சந்திப்பில் ஓமான், பாலஸ்தீனம், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தூதவர்கள் கலந்து கொண்டிருந்ததாக பிரதமரின் ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.