250 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கலப்பு அபிவிருத்தி திட்டம் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.வெளிநாட்டு முதலீட்டுடன் இந்த திட்டம் கொழும்பு வாளதக்ஸ மாவத்தையில் மேற்கொள்ளப்படவிருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பல்லின கட்டிட நிர்மாண திட்டமாக இது முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

600 தொடக்கம் 700 அடி உயரத்தை கொண்டதாக 30 மாடி வீடமைப்பு திட்டம் கொழும்பில் அமைக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் 6 வருட காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)