ஆழிப்பேரலையால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் நாளை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை காலை 9.25 முதல் 9.27 வரை மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகிறது. Read more
யாழ். மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உட்பட இரு வீடுகள் வன்முறை கும்பலால் சேதமாக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவித்தலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி காவல்துறை அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு.சந்திகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதுதாவது,
2020ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தின தேசிய நிகழ்வில், சிங்கள மொழியிலான தேசிய கீதம் மாத்திரமே பாடப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை இதுவரை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து அபராத தொகையை பெற்றுக்கொள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வவுனியா போகஸ்வௌ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவரால் பறித்துச்செல்லப்பட்ட இராணுவ வீரரின் துப்பாக்கி கெக்கிராவைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். குருநகர் ஆழ்கடல் சுழிக்குள் சிக்குண்டு இன்று அதிகாலை ஒரு பிள்ளையின் தந்தையான மீனவர் உயிரிழந்துள்ளார். சாவக்காட்டு பகுதியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் கவயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.