திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் தரையிறக்கப்படும் எரிபொருள் கடல் நீருடன் அதிகளவில் கலப்பதாக சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளையும் உபகரணங்களையும் பயன்படுத்துமாறு திருகோணமலை துறைமுகத்தில் எரிபொருள் தரையிறக்கும் இந்திய நிறுவனத்திற்கு அறிவித்ததாக கடற்படை தெரிவித்தது. திருகோணமலை துறைமுகம் உலகில் இருக்கும் மிகப்பெரிய இயற்கை துறைமுகங்களில் ஒன்றாகும்.

இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளில் திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு பல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதன் பிரகாரம், மாதாந்தம் நான்கைந்து பெரிய கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருவதுடன் அவற்றில் ஒரு தடவைக்கு 20,000 தொன் எரிபொருள் கொண்டுவரப்படுகின்றது.

இந்திய நிறுவனமும் ஊநுலுPநுவுஊழு-வும் அதிகளவு எரிபொருளை இலங்கைக்கு கொண்டுவரும் நிறுவனங்களாகும். உலக நாடுகள் பல எரிபொருளை தரையிறக்கும் போது எரிபொருள் கசிவைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தாலும் இலங்கையில் அவ்வாறான ஒன்றைக் காண முடிவதில்லை.

அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமலே கடந்த 28 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து எரிபொருள் தரையிறக்கப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து எரிபொருள் கசியும் தன்மை அதிகமாக இருக்கின்றதென சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

அதன் பிரகாரம், எரிபொருள் தரையிறக்கப்படும் போது அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி உரிய உபகரணங்களை பயன்படுத்துமாறு இலங்கை கடற்படையினர் இந்திய எரிபொருள் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளனர்.