வவுனியா ஓமந்தை, விளக்குவைத்த குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். அப் பகுதி காணி ஒன்றில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெடிப்பொருள் இருப்பது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வெடிப்பொருளை மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி கோணாவில் கிழக்குப்பகுதியில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், போதிய குடிநீர் கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அக்கிராமத்தில் காணப்படும் பொதுக்கிணறுகள் மற்றும் ஏனைய கிணறுகளில் நீர் வற்றிக்காணப்படுவதாலே தாம் நீர்ப்பற்றக்குறையை எதிர்கொள்வதாக அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.