2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்றுமாலை இடம்பெற்றது. இதன்போது, வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்று மாலை வாக்களிப்பு நடத்தப்பட்டது. Read more
வவுனியாவில் இன்றும் எதிர்வரும் சில தினங்களிலும் சுழற்சி முறையில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. இந்தவகையில் காலை 8மணி தொடக்கம் மாலை 5மணிவரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மேற்படி மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாக மின்சார சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்தவகையில் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 30ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று 694பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறைகளிலிருந்து 43பேரும், பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 335பேரும் இதில் அடங்குகின்றனர். இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்து 75ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்ட 697 பேரில் 357 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அவர்களில் 128 பேர் மட்டக்குளி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் பொரளை பகுதியில் நேற்றைய தினம் 110 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அதேநேரம் கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கம்பஹா மாவட்டத்தில் 209 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 பேர் மஹர பகுதியிலும் 54 பேர் கட்டுநாயக்க பகுதியிலும் 47 பேர் மஹபோல பகுதியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்களில் வசிப்பவர்களை பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகக்கு உட்படுத்தும் நடவடிக்கை நேற்று முன்தினம் முதல் ஆரம்பக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் 2020 டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின்போது மன்னார் மடு தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான இடைமாறல் இல்லங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளை அவர் மேற்பார்வை செய்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 697 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,074 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 357 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 219 பேரும், கண்டி மாவட்டத்தை சேர்ந்த 38 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அங்கத்தவர்கள் இன்று (10) தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவு செய்யப்பட்டதோடு அதன் அங்கத்தவர்களாக எம்.எம்.மொஹமட், எஸ்.பீ. திவாரத்ன, கே.பி.பி. பத்திரன மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது காரொன்று, நேற்று (09) நண்பகல் 12 மணியளவில் மோதியதில் 6 வயது சிறுவனும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், சவகச்சேரியில் கொழும்பு நோக்கிப் பயணித்த மேற்படி கார், எரிபொருள் தாங்கி வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.