சீனாவின் சர்வதேசத்துறை துணை அமைச்சர் சென் சோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு, 2023 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கையில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இது 2023இல் சீனக் கட்சியின் முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் மற்றும் சீனா தேசியக்காங்கிரஸின் 20ஆவது மாநாட்டுக்கு பின்னரான முதல் பயணம் என்று தூதரக தரப்புக்கள் தெரிவித்தன.
தூதுக்குழுவினர் இலங்கையின் அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளனர். இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவித்திருந்தார். இதன்போது இந்தியா, இலங்கைக்கு வழங்கிய கடன்களின் மறுசீரமைப்பு தொடர்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.