நானுஓயா – ரதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலிய நீதவான் நீதிமன்றில் பஸ் சாரதி  இன்று(22) ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(20) இரவு நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று, டிக்கோயாவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்திருந்தது.

இந்த விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததுடன், மூவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருவகின்றனர்.

இதனயைடுத்து, ரதெல்ல குறுக்கு வீதியை கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற வீதியை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இன்று(22) அவதானித்ததாக அவர் குறிப்பிட்டார்.