ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

லோக்சபாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார், 30 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் குடியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளிக்கையில், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்றும் நித்தியானந்தா ராய் திட்டவட்டமாக கூறினார்.

முன்னதாக காலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்த போது திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு, ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.