Header image alt text

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலி மேற்கு பிரதேச மாணவர்களுக்கு உதவி-

ilavalai varuththapadaatha vaalipar sankam (8)கடந்த 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய வலி மேற்கு பிரதேசத்திகு விஜயம் மேற்கொண்ட இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க பிரதிநிதிகள் 10 கல்வி பயிலும் மாணவர்கட்கு மிக பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்விக்கு ஒத்துழைப்பை வழங்கினர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறான துடிப்புமிக்க இளைஞர்களின் பணி முக்கியமான ஒன்றாகவே இன்று காணப்படுகின்றது. இளவாலையை சேர்ந்த இவ் இளைஞர்கள் தமது பிரதெசத்திற்கப்பாலும் சேவையாற்ற வேண்டும் என்ற மனப்பாங்கில் எமது பிரதேசத்திற்காற்றிய இவ்; உதவி தொடர்பில் பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன். நடைபெற்று முடிந்த கோர யுத்தத்தின்பின் நாம் எதிர்நோக்கும் சவால்கள் ஏராளமானவை. வெறுமனே வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொட்பில் வாழ்வாதரத்தினை கட்டி வளர்க்க முடியத நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உதவும் என கூறியதோடு இவ்வாறான இளைஞர் சமூகத்தினை பாராhட்டுவதாகவும் உதவி புரிந்தவர்களை பாராட்டுவதாகவும் கூறினார்.

vaalipar sankam (5) vaalipar sankam (6) vaalipar sankam (7) vaalipar sankam (10) vaalipar sankam (11) vaalipar sankam (12)

வலிமேற்கு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர்தின நிகழ்வு-

கடந்த 11.10.2014 சனிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சர மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர் தின நிகழ்வுகள் வலி மேற்கு பிரதேச முன்பள்ளி இணைப்பாளர் நிரஞ்சனா ஆசிரியை தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் ஏராளமான முன்பள்ளி ஆசிரியைகள் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் தலைமை உரையின்போது பிரதேச முன்பள்ளிகள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாகவும் தெரிவித்த தலைவர் அவர்கள், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் இவ் மண்டபத்தை முன்பள்ளி நிகழ்வுகளுக்கு வழங்கியமை தொடர்பில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எமது முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி ஒவ்வொரு ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தி சான்றிதழ் வழங்கியதோடு மட்டும் அல்லாமல் இவ் விழாவை நிகழ்த்துவதற்கு எம்மிடம் போதுமான வசதி காணப்படவில்லை என குறிப்பிட்போது தனது மாதாந்த ஊதியத்தினை வழங்கி எமது விழாவை நடாத்துவதற்கு போதுமான உதவியை மேற்கொண்டுள்ளார். இந்த வகையில் அவரது செயற்பாடுகள் பாராட்டத்தக்கது பொற்றத்தக்கது என குறிப்பிட்டார். தொடர்ந்து இவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது. Read more

சித்தன்கேணிபாலர்பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு-

கடந்த 12.10..2014 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். சித்தன்கேணி பாலர் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு பாலர் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர் செல்வி லீலாவதி மாரிமுத்து தலைமையில் இடம்பெற்றது இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரும் இவ் ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். சிறார்களின் மகிழ்வான வரவேற்புடன் இவ் நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து இவ் பாடசாலையின் பழைய மாணவரும் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவருமாகிய சபா.வாசுதேவக் குருக்கள் ஆசியுரையினை வழங்கினார். இவ் நிகழ்வில் கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரும் இவ் ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று எமது சமுதாயத்தில் முன் பள்ளிகள் காத்திரமான பங்கை வகிக்கின்றது. வளரும் சிறார்களை உரிய முறையில் வளர்த்தெடுக்கவேண்டியது மிக முக்கிய கடமையாக காணப்படுகின்றது. இந்த வகையில் இவ் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எமது முன்பள்ளிகள் மிக முக்கிய பங்கினை வகித்து வருகின்றன. இன்றைய இவ் மழலைகளே நாளைய எமது எதிர்காலத்தினை தீர்மானிக்கும் தலைமுறைகள் ஆவர். அம்மா என்ற வாhத்தை எழுத்தில் எழுதக் கற்றுக் கொள்வது இவ் இடத்திலேயே ஆகும். இந்த வகையில் இவ் முன்பள்ளி பழைய மாணவி என்ற வகையில் மகிழ்வடைகின்றேன் Read more

யாழ்தேவி மூலம் இரண்டு நாட்களில் 9 லட்சம் ரூபாய் வருமானம்-

yaldevi24 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட யாழ்தேவி ரயில் கடந்த இரண்டு நாட்களில் 09 லட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் இன்று தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி பளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி புகையிரத சேவையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைக்கப்பட்டுள்ளதாக நா.தபானந்தன் கூறியள்ளார். அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதிவிசேட இருக்கைகளுக்கான பதிவுகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்படுவதால் அதிவிசேட இருக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செந்தில் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்-

senthilஊவா மாகாண சபை அமைச்சர்களாக சசீந்ர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சசீந்ர ராஜபக்ஷ – நிதித் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி, காணி, கலாசார, சமூகநல, கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கட்டுமாண அமைச்சராகவும், செந்தில் தொண்டமான் – வீதி அபிவிருத்தி, வீடு, நீர்வள மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும், அநுர விதானகமகே – விவசாய, நீர்பாசன, விலங்கு உற்பத்தி, மீன்பிடி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், சாமர சம்பத் தஸநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், மின்சார எரிசக்தி, சிறு கைத்தொழில் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராகவும், குமாரசிறி ரத்நாயக்க – சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பாதுகாப்பு மகளிர் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

புலிகள்மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கம்-

imagesCA47OAWZபுலிகள் இயக்கம்மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ் வழக்கில் புலிகள் சார்பாக நெதர்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இவ் வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின்போது 2009ஆம் ஆண்டுக்குப் பின் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை. தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் புலிகள் போராட விரும்புகின்றனர் என வாதிடப்பட்டது. மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலிகள்மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை என கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார். இன்று இவ் வழக்கில் புலிகள் இயக்கம்மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு தினம் அனுஷ்டிப்பு-

Pஉலக உணவு தினம் வருடந்தோறும் ஒக்டோபர் 16-ம் திகதி உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 1945-ம் ஆண்டில் இதே நாளில் ஐ.நா நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவுகூர ஐநா இந்நாளைச் சிறப்புநாளாக அறிவித்தது. நவம்பர் 1979-ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150-ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் 80 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கையில் இருக்கும் சிறைக்கூடமே தமிழர்களுக்கான நரகமாகும்-அனந்தி சசிதரன்-

ilankaiyil irukkum siraikoodameநரகம் என்ற ஒன்று இருப்பது என்றால் அது இலங்கையில் தமிழர்களுக்காக இருக்கும் சிறைக்கூடம் மட்டுமே என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, போர் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் சந்தேகத்தின், பேரில் கைது செய்யப்பட்டு வருடக் கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டும் எனப் பல முறை வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்பட்டிருக்கவில்லை. சிறையில் திடீர் திடீரென தமிழ் அரசியல் கைதிகள் மரணமடைவதும் அதற்காக அரச தரப்பினில் நியாயங்கள் கூறப்படுவதும் உண்மைகள் மறைக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்ற விடயமே. Read more

பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் யாழ். ஆயர் சந்திப்பு-

பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் அவர்களுக்குமிடையில் யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. பிரித்தானிய உயர்த்தானிகராக பதவியேற்ற பின்னர் முதன்முதலாக யாழிற்கு நேற்று விஜயம் செய்த உயர்ஸ்தானிகர் யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது, யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களையும் சந்தித்தார். அச்சந்திப்பின்போது, ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மற்றும் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு என்ற பெயர் பறிபோன பின் யோசிப்பதில் பயன் இல்லை – செல்வம் எம்பி-

imagesகூட்டமைப்புக்கென ஒரு யாப்பு எம்மிடம் வரையப்பட்டால் அதனை யாரும் கொண்டு செல்லமுடியாது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நேற்று வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சி , டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன பதிவு செய்வதில் விரைவாக செயற்படாது விட்டால் தேர்தல் ஆணையாளர் கூறியது போல் தை மாதத்திற்கு பின்னர் இருந்து யோசிப்பதில் பயன் இல்லை. தேர்தல் ஆணையாளரும் பலர் இப் பெயரை கேட்பதனால் நீங்கள் உங்கள் செயற்பாட்டை செய்யாது விட்டால் கூட்டமைப்பின் பெயரை யாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை கூறியுள்ளார். ஆகவே நாம் அவ்விடயத்தில் துரிதமாக செயற்பட வேண்டும். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்ய வேண்டுமென அதன் தலைவர் ஒத்துக்கொண்டிருக்கின்றார். இது தொடர்பில் நாம் வலுவாக செயற்படவுள்ளோம். ஆகவே ஒற்றுமையாக இந்த பதிவை செய்து முடிப்போம். இதேவேளை அண்மையில் மாவை சோதிராஜா தெரிவித்த கருத்தையும் இரா. சம்பந்தன் அவர்கள் மறுத்துள்ளார். அவர் அவ்வாறு தெரிவிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இவ்விடயத்திலே திருமலையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் மாவை சேனாதிராஜாவும் உள்ளடங்கியுள்ளார். Read more

யாழ்ப்பாணத்தை அடைந்தது முதல் தபால் ரயில்-

yaal mail rain24 வருடங்களுக்கு பின்னர் முதலாவது தபால் ரயில் இன்றுகாலை 7.25 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்தை அடைந்தது. முதலாவது தபால் ரயிலை வரவேற்கும் விதத்தில் வரவேற்பு நிகழ்வு மற்றும் தபால் ஊர்வலம் என்பவற்றை யாழ்.பிரதம தபால் நிலையத்தினர் நடத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தபால் ரயிலில் வந்த தபால் பொதிகளை பொறுப்பேற்ற இலங்கை தபால்மா அதிபர் ரோஹண அபேவர்த்தன, அவற்றை தபால் பொதி சுமப்பவரிடம் கையளித்தார். இதனையடுத்து, பாரம்பரிய தபால் காவும் முறையான, வண்டிலில் தபால் கொண்டு செல்லும் முறையில் தபால் பொதி சுமப்பவர் யாழ்.புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகளை யாழ்.பிரதம தபால் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இனிவரும் காலங்களில் பாரம்பரிய முறையன்றி, வாகனத்திலேயே தபால் நிலையம் வரை தபால்கள் கொண்டுசெல்லப்படும் என தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இராமர் பாலத்தைப் பாதிக்காத வகையில் கடல் வழிப் பாதை-

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய கடல்வழிப் பாதையொன்றை அமைப்பது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பில் மேற்கொள்ளப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமையே இதற்கு காரணமாகும். இதற்கமைய இராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கடல் வழிப் பாதையை அமைப்பதற்கு இந்தியா உத்தேசித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான பத்திரம் விரைவில் இந்திய மத்திய அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை இணைக்க 80ஆயிரம் மேன்முறையீடு-

2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாத சுமார் 80,000 பேரிடம் இருந்து மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. தற்போது மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் பங்கேற்காதவர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் கருத்திற் கொள்ளப்போவதில்லை எனவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டுகின்றது. எவருக்கேனும் விசாரணைகளில் பங்கேற்க முடியாத பட்சத்தில், முன் அறிவிப்பின் ஊடாக திகதியை மாற்றிக்கொள்ள அல்லது கடிதம்மூலம் அதிகாரத்தை வழங்கி ஒருவரை விசாரணைகளில் கலந்துகொள்ளச் செய்யமுடியும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 31ஆம் திகதி உறுதி செய்யப்படவுள்ளதுடன், அதனை கிராம உத்திகேத்தர் அலுவலகம், பிரதேச செயலர் அலுவலகம், உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசு கவி சிவசுப்பிரமணியம் அவர்களது வழித்துணை கவிதை நூல் வெளியீடு-

254 673கடந்த 12.10.2014 அன்று மூளாய் ஊரைச் சேர்ந்த ஆசு கவி சிவசுப்பிரமணியம் அவர்களது வழித்துணை கவிதை நூல் வெளியீடு சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி றிச்வே மண்டபத்தில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கினார். அவர் அங்கு உரையாற்றுகையில், ஆசு கவி அவர்கள் அவர்களது தொடர்ச்சியான கவி இயற்றும் தன்மையினால் ஆசு கவி எனப் போற்றப்படுகின்றார். நான் அறிந்த காலம்முதலாக அமைதியான சுபாவம் தழிழிலும் சைவத்திலும் தளராத பற்றுக் கொண்ட ஒரு பற்றாளனாகவே கண்டு கொண்டேன். இவற்றுக்கும் அப்பால் ஒரு மனிதத்துவத்தின் மகத்துவத்தை பிறருக்கு எடுத்துக்காட்டுவதற்காக வாழ்ந்து வரும் ஓருவராகவே அடையாளப்படுத்த முடியும். மூளாய் வதிரன் புலோ சித்திவிநாயகர்மீது கொண்ட மட்டற்ற ஈடுபாட்டினால் அவ் ஆலய முன்றலில் சிறிது சிறிதாக எழூதப்பட்ட கவிகளின் தொகுப்பாக ஒரு தழிழ் வழிகாட்டியாக எமது இவ் உலக வாழ்கையின் தத்துவங்களை செல்கின்ற ஒரு ஏடாக எமது வரலாற்றை எடுத்து இயம்பும் ஒரு நூலாக இது வெளிவருவது வரவேற்த்தக்கது போற்றத் தக்கது. இவ்வாறான நூல் காலத்தின் தேவைக்குரிய ஒரு நூலாக கருதுகின்றேன். Read more

வெளிநாட்டவர் வடக்கு செல்ல அனுமதி அவசியம்-இராணுவப்பேச்சாளர்-

140423154515_srilankaomanthaicheckpostmilitary_640x360_bbc_nocreditவெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வட மாகாணத்துக்கு செல்லவேண்டுமாயின் அதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என இராணுவப்பேச்சாளரும் அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இன்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் யாழ். விஜயத்தையொட்டி வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் வடபகுதி செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற நீண்ட கால யுத்தம் நிறைவுக்கு வந்தையடுத்து தற்போது வடக்கு பகுதியில் சுமூகமான நிலை ஏற்பட்டு வருகின்றது. வடக்கில் மட்டுமல்ல நாட்டின் பல பிரதேசங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்கள். உலகலாவிய அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை மேற்கொண்டிருந்தன. இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் மீண்டும் பிரச்சினையை தோற்றுவிபதற்கு இடங்கொடுப்பதற்கான எந்தவொரு அவசியமும் எமக்கு இல்லை. Read more

19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம்-

19 aavathu arasiyalamaippuஒளிமயமான நாளை என்ற தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட 19வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் நேற்று மக்கள் விமர்சனத்திற்காக வெளியிடப்பட்டது. இதன்போது, உரையாற்றிய அதன் இணைப்பாளர் அத்துரலியே ரத்தன தேரர், யாப்பு சீர்த்திருத்தப்படாமல் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது ஏற்புடையதல்லவென குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான, தினேஷ் குணவர்த்தன, வாசுவேத நாணயக்கார, திஸ்ஸ வித்தாரன, பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தவிர, எதிர்கட்சிகள் சார்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, விஜேதாச ராஜபக்ச, சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட அரசியலமைப்பு சீர்த்திருத்தம் பலவற்றிற்கு 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மூலம் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதி பதவி ரத்து செய்யப்படும் என அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

அமெரிக்க எமி விருதுக்கு ‘மோதல் தவிர்ப்பு வலயம்’ பரிந்துரை-

america emi viruthukkuஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மோதல் தவிர்ப்பு வலயம் விவரணப்படம் அமெரிக்காவின் உயர் தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விவரணப்படம் நேற்று 2014ஆம் ஆண்டின் சர்வதேச ´எமி´ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விருதை பெறும் விவரணப்படம் குறித்த அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி நியூயோர்க்கில் வெளியிடப்படவுள்ளது. மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை, போர்க்குற்றங்களை சாட்சியங்களுடன் இந்த விவரணப்படம் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக எம்மி விருதுகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது. 10 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுப் பட்டியலில் சிறந்த ஆவணப் படங்களுக்கான பிரிவில் ´மோதல் தவிர்ப்பு வலயம் விவரணப்படமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி-

சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை ஊழியர்களுக்கு இதுவரை தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை எனவும், இதனால் தூதர் பிரதேசங்களில் இருந்து சேவைக்குவரும் சிறை ஊழியர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். அதனால் சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க… Read more

நெடுந்தீவுக்கு முழுமையான மின்சார விநியோகம்-

imagesயாழ். நெடுந்தீவுக்கு நாளைய தினம் முதன்முழுமையாக மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. 40 வீதமான மின்சாரமே இதுவரை நெடுந்தீவுக்கு விநியோகிக்கப்பட்டு வந்ததாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் நெடுந்தீவு கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கும் வகையில், 1,082 குடும்பங்களுக்கான மின்சாரம் விநியோகிக்ப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியாவில் குழந்தையைக் கடத்திய பெண் கைது-

வவுனியாவில் இரண்டு வயதுக் குழந்தையை கடத்தியதாக கூறப்படும் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரிலுள்ள அடகுக் கடையொன்றுக்கு அருகில் தாயுடன் இருந்த குழந்தையே, பெண்ணொருவரால் கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையின் தந்தையது நண்பி எனத் தெரிவித்து, குறித்த பெண் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், சந்தேகநபரான பெண், குழந்தையின் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது கணவர் பெற்றுக்கொண்ட பணத்தை மீளக் கையளிக்கும்வரை குழந்தையை ஒப்படைக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.