Posted by plotenewseditor on 13 July 2015
						Posted in செய்திகள் 						  
											
					வவுனியாவில் நடைபெற்ற 26ஆவது வீரமக்கள் தின ஆரம்ப நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 26ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்று (13.07.2015) கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக கழகக்(புளொட்) கொடி கழகத்தின் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் மற்றும் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வை.பாலச்சந்திரன், வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. சிவநேசன் (பவன்), திரு. ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு தொடர்ந்து கழகத்தின் தோழர்களால் மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில் நிசாந்தன், ரவி, சிவா, ஜஸ்மின், பார்த்தீபன் ஆகிய கழகத் தோழர்களும் பிரதீபன், நிகேதன், சுரேஸ் உள்ளிட்ட ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். 
 Read more