Header image alt text

மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் அவர்களுக்கு பிரிவுபசார விழா-(படங்கள் இணைப்பு)

photo 3முல்லைத்தீவு மாவட்ட முன்னால் அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு. வேதநாயகம் அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட இனிய வாழ்வு இல்லத்தில் இன்று பிரிவுபசார விழா இடம்பெற்றது. இதில் மாவட்ட பிரதம கணக்காளர், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர், வட்டு இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்கள், பல நிறுவனங்களின் அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் போன்றோர் விருந்தினார்களாக கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபரினை கௌரவப்படுத்தினார் இந் நிகழ்வினை இனிய வாழ்வு இல்லத்தின் நிர்வாகம் தலைமை தாங்கி நடத்தியதுடன். இல்லத்தின் விசேட தேவைக்குரிய மாணவர்களின் கலை நிகழ்வுகளால் அரசாங்க அதிபர் மற்றும் சபையோரும் அவர்களின் திறமை கண்டு பெருமிதம் அடைந்தனர்.

Read more

ஐ.ம.சு கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு ஹெல உறுமய தீர்மானம்-

hela urumayaஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என மாற்றியமைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறுகின்றது. மேலும் இதுவரை சங்காக இருந்த அக்கட்சியின் சின்னத்தை வைரமாக மாற்றி அமைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. இதேவேளை அரசியல் கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னத்தை மாற்றிக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் நான்கு மாற்றங்கள் மேற்கொள்வதற்கு விண்ணப்பித்திருந்ததாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தமது புதிய பெயரில் போட்டியிடவுள்ளதாக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

வேட்புமனு கையளிப்போருக்கு விஷேட அறிவுறுத்தல்-

mahindaபொது தேர்தலில் போட்டியிடும் நோக்கமின்றி ஏனைய கட்சிகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ ஆதரவு வழங்கும் நோக்கில் வேட்பு மனு கையளிப்பவர்களது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். சிலர் அரசியல் கட்சிகள் ஊடாகவோ அல்லது சுயாதீன குழுக்கள் ஊடாகவே அவ்வாறான வேட்பு மனுக்களை கையளிப்பதாகவும், அவ்வாறு எந்த வேட்பாளருக்கும் ஒத்துழைப்பு வழங்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் ஏதேனும் கட்சியோ அல்லது சுயாதீன குழுவினால் ஸ்தாபிக்கப்படும் பிரசார காரியாலயத்தை ஏனைய வேட்பாளர்களுக்கு பயன்படுத்த இடம் வழங்கப்படாது எனவும் தேர்தல் ஆணையரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதவிர, ஏதேனும் கட்சியினால் அல்லது சுயாதீன குழுவினால் போட்டியிடும் வேட்பாளருக்கு பிறிதொரு கட்சியை ஊக்குவிக்க இடம் வழங்கப்படாது என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேர்வின், துமிந்த, சஜினின் வேட்புமனு இல்லை. ஹிருணிகா, கோட்டாபய போட்டி, அர்ஜூன ஐ.தே.கட்சியில் போட்டி-

gotabaya......எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வேட்புமனு வழங்கப்படமாட்டாது எனவும் இந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் வேட்புமனு வழங்கப்படமாட்டாது என தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகிய இருவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடவிருப்பதாக தகவல்; வெளியாகியுள்ளன. அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டபய ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என தகவல்கள் கூறுகின்றன இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விழிநீர் அஞ்சலிகள் –

Posted by plotenewseditor on 5 July 2015
Posted in செய்திகள் 

விழிநீர் அஞ்சலிகள் – அமரர் தர்மலிங்கம் செல்வராசா (துரை) அவர்கள்

5656566கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை (Villiers Le Bel) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் செல்வராசா (துரை) அவர்கள் கடந்த (01-07-2015) அன்று அகலா மரணமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் திரு. தர்மலிங்கம் திருமதி குஞ்சரம் ஆகியோரது அன்பு மகனும், திரு. சுப்பிரமணியம் திருமதி சந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும், சிந்துஜாவின் அன்புக் கணவரும், அர்ச்சனா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். அன்னார் யோகராணி, யோகராசா, செல்வராணி, ஜெயராணி, ஜெயராசா, நாகராசா, தர்மராசா, புவனேஸ்வரராசா, குமுதினி ஆகியோரின் சகோதரனும்

அனுசியா, புகழ்ராஜா, தாஸ், றதினி, சுகந்தினி, சுலேகா, தர்சினி, ஜெகதீஸ்வரன், மாதுழன், கினித்தா, ஜஸ்மன், அனோஜ் ஜஸ்மின் ஆகியோரின் மச்சானும், ரமேஸ், ரூஜிகா, ரவிகா, சுரஞ்சனி, சுபாஷினி, சுதர்சன், யவுதன், திஷான், சங்கீர்த்தனன், கஜனி, நிஷானி, விசாகன், விஜயகுமார், பிரபாகர் ஆகியோரின் மாமனும் யுமானி, நிரோஷன், ஜனன், ஹிந்துஜா, ஹம்சா, சகானா, ஹரினி, ஹரீஸ், மகீசன், சரண்யா, அனீஸ், கனிஷா, அபிஷை, ஆறுன், ஐஸ்வர்யா, இனியா, அகிள் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார். 

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தொடர்புகட்கு!  தீபன் -(இலங்கை) 0094773107629 ஜெயராசா (பிரான்ஸ்) 0033 753697455
குமரன் (பிரான்ஸ், 0033 751559227 நாகராசா (லண்டன்) 0044 7440168484
அனோஜ் (லண்டன்) 0044 7448485899 அம்மா (இலங்கை) 0094 771019555
செல்வராணி (இந்தியா) 0091 9790987140 தாஸ் (லண்டன்) 0044 7438498729
குமுதினி (லண்டன்) 0044 7714869833

இணுவிலில் கலைநிலம் பிரதேச மலர் வெளியீட்டு விழா-2015-


DSCN6061 (Large)யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய “கலைநிலம்” பிரதேச மலர் வெளியீட்டு விழா-2015 நேற்று (03.07.2015) வெள்ளிக்கிழமை இணுவில் சிவகாமியம்மன் கோவில், திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியனவற்றின் நிதி அனுசரணையுடன், உடுவில் பிரதேச செயலாளர் நந்தகோபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, வலிகாமம் தெற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்து கிராமங்களின் முக்கிய இடங்கள், கோவில்கள் மற்றும் சமூகத்திற்கு சகல துறைகளிலும் சேவை செய்த பெரியார்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய மிகச் சிறந்த புத்தகமாக “கலைநிலம்” மலர் வெளியிடப்பட்டது. மிகச் சிறப்பாக நடைபெற்ற மேற்படி புத்தக விளையாட்டு விழாவில் அதிதிகளாக புளொட் தலைவரும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நாதன், பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். இந்நிகழ்வின்போது சமயம், இலக்கியம், விளையாட்டு பாரம்பரிய விளையாட்டு, சித்த மருத்துவம், பண்ணிசை ஆகிய துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள் “ஞான ஏந்தல்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

சூரிச் Unter Affoltern மண்டபத்தில் 26ஆவது வீரமக்கள் தினம்..!!
26V.M Postrதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 05.07.2015 ஞாயிறன்று மதியம் 2.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில் புளொட்டின் 26ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இத்தால் அறியத் தருகின்றோம்
மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் வினோதவுடைப்போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. 
*** அன்றையதினம் (05.07.2015) காலை 8.30க்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளது. இப் பரீட்சைக்கு இதுவரையில் தங்களைப் பதிவுசெய்யாத பிள்ளைகள் குறித்த நிகழ்வு இடம்பெறும்
அன்று காலை 8.30க்கு நேரடியாகவே அங்கு வருகைதந்து தம்மைப் பதிவு செய்துவிட்டு மேற்படி பரீட்சையில் கலந்து கொள்ள முடியுமென்பதையும் அறியத் தருகின்றோம். அன்று பிற்பகல் 2.30க்கு நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

Read more

மக்களின் ஆணையை ஒருபோதும் மீறப்போவதில்லை-ஜனாதிபதி-

maiththiriஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை ஒருபோதும் மீறப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக வீதியின் கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான வீதியை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 49 வருட அரசியல் அனுபவத்தைத் தான் கொண்டுள்ளதாகவும், திடீரென அரசியலுக்குள் பிரவேசிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தன்னால் எடுக்கப்படுகின்ற முடிவுகள் அனைத்தும் மிகத் தெளிவாக எடுக்கப்படுவதாகவும் ஜனவரி 8ம் திகதி ஏற்பட்ட மாற்றத்தை பாதுகாப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். மாணவன் கடத்தல் தொடர்பில் மூவர் கைது-

arrestயாழ் நகரிலுள்ள ஒரு பிரபல பாடசாலையில் தரம் 1ல் கல்வி பயிலும் மாணவனை ஆட்டோவில் கடத்த முற்பட்ட மூவரை யாழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். குருநகரைச் சேர்ந்த குறித்த பாடசாலை மாணவனின் சகோதரியின் கணவன் மற்றும் அவரது நண்பர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் நேற்று பாடசாலை முடிவடைந்த பின் நண்பர்களுடன் பற்றிக்ஸ் வீதி வழியாக வீடு சென்றுகொண்டிருந்தபோது அவ்வீதியில் ஆட்டோவில் நின்ற 3 இளைஞர்கள் பாடசாலை மாணவனை கடத்தி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஆட்டோவின் இலக்கத்தை அவதானித்த மாணவனின் நண்பர்கள் பாடசாலை அதிபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், ஆட்டோவை பொலிஸார் மடக்கிப்பிடித்து மாணவனை மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரையும் யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பின்னர் மூவரையும்; தடுத்து வைத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்திலேயே போட்டி-

UNP (2)எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான கூட்டணி அமைத்தாலும், ஐக்கிய தேசிய கட்சி தமது யானை சின்னத்திலேயே போட்டியிடும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் பல்வேறு சிறு கட்சிகள் இணைந்துள்ளன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவிருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியுடனேயே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவ்வாறான கட்சிகளுக்கு இடையில் தொகுதி பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

பொலிஸ் பிரிவுகளில் தேர்தல் அலுவலகங்கள் அமைப்பு-

ruwan gunasekaraஎதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து, அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்குள்ளும் தேர்தல் நடவடிக்கை அலுவலகம் ஒவ்வொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றிருந்த ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் தலைமையகத்தை மையப்படுத்தி, தேர்தல் செயலக அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த ஊடக சந்திப்பின்போது, தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு என்ன நடக்கம் என்று கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய காவற்துறை ஊடகப் பேச்சாளர், இந்த விசாரணைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டி-

sangariஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடவுள்ளதாக, கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கடந்த 200 வருடகால மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படாத நிலையில், அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மலையகத்தில் லயன் அறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. போக்குவரத்து நடவடிக்கைகள் சீர்கெட்டுள்ளன. நாடு சுதந்திரமடைந்து, 65 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மாறி மாறி வந்த கட்சிகளினால் மலையக மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அனைத்து தோட்டங்களிலும் உள்ள பாதைகள் சீர்செய்யப்படும், மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும், இளைஞர்களுக்கு படிப்பிற்கேற்ற அரச வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. சமூக அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டணி குறிப்பிட்டுள்ளது,

யாழ். மாணவிகள் துஷ்பிரயோகம்: ஓய்வுபெற்ற அதிபருக்கு விளக்கமறியல்-

jail.......யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் ஐவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான ஓய்வுபெற்ற அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் ம.கணேசராசா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இலங்கை தொடர்பில் மேலும் அவதானம்-

human right.....சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சில இலங்கை தொடர்பான கடிதம் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளன. இலங்கை தொடர்பில் மேலும் அவதானத்துடன் செயயற்படுமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக சாதகமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், அதனை தொடர்ந்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷேடமாக கடந்த ஆட்சியின்போது இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய அரசாங்கம் மனித உரிமை நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் அதில மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேகப் பாதை நிர்மாணம்-

highwayதெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் ஆகியோர் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 4.5 பில்லியன் செலவில் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான 75 கி.மீ பகுதி பாதையே நிர்மாணிக்கப்பட இருக்கின்றன. இந்த அதிவேகப் பாதையை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.

மலையக சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றிணைவோம்-

67676தமிழர் விடுதலைக் கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. 200 வருடகால மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தில் வெள்ளைக் காரர்கள் கட்டிய அதே லயத்து வாழ்க்கையிலும் வெள்ளைக்காரர்கள் போட்ட அதே வீதிகள் இன்று குன்றும் குழியுமாக மாறியுள்ள நிலையிலுமே அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டிருக்கின்றது.

அன்று கட்டிய லயன் வீடுகள் இடிந்து விழும் நிலைக்கு வந்து விட்டன. அன்று போட்ட வீதிகளில் மக்கள் நடப்பதற்கே சிரமமாக இருக்கின்றது. அதனால் போக்குவரத்து ஒழுங்குகள் சீர்கெட்டு வாகனங்களில் பயணிப்பது எமதர்மராஜனை ஒரு தடைவை சந்தித்துவிட்டு வருவது போலுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி எப்படி முன்னேறும். அழகாக பாடசாலைக் கட்டிடங்களை கட்டி விட்டு, புதிதாக ஆசிரியர் நியமனங்களையும் கொடுத்துவிட்டு மாணவர்கள் படிக்கவில்லையே என்றால் எப்படி? அவர்களுக்கு ஒழுங்கான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

பாதி நேரம் அவர்களின் போக்கு வரத்துக்காகவே போய்விடும். மீதி நேரம் அவர்கள் களைத்துப்போய் நித்திரை கொள்ளவே சரியாகிவிடும். அந்த வீதிகளில் அவசரத்தில்; வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளின் நிலைமை அதோகதிதான். கொழும்பில் எவ்வளவு பஸ் போக்குவரத்து வசதிகள் இருந்தும் மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்குக்கூட இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மாணவர்களை பாடசாலை வாசலுக்கே வந்து எற்றி இறக்கி விடுகின்றன.

Read more

போரினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_6985முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விக்கான வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் உதவித்திட்டத்தில் ஏற்கனவே உள்ள 43 பிள்ளைகளுடன் இன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரவுக்குட்பட்ட சுமார் 20 பிள்ளைகளின் வங்கிக்கணக்கில் தலா 1000 ரூபா வைப்பிலிடப்பட்டு அவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா கல்விக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தினை துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வழங்கி வைத்தார். இதற்கான நிதி அனுசரனையை அநசஉயவெடைந ளநஉரசவைல ளநசஎiஉந உதவியாளர் திரு. சுகுமார் அவர்கள் வழங்கியுள்ளார்.

Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர்க்கு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_7013முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற பயனாளிகளின் அவசியத் தேவையினைக் கருத்திற்கொண்டு வவுனியா, உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் இதற்கான நிதியுதவியினை வழங்கி பயனாளிகளுக்கான மெத்தைகளைப் பெற்றுக்கொடுக்க உதவியுள்ளனர். இதன்படி நேற்றையதினம் 17 பயனாளிகளுக்கு 56,100 ரூபாய் நிதியுதவியில் மெத்தைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற பயனாளிகள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழை முள்ளந்தண்டு பாதிப்புற்றோர் அமைப்பு இவர்களின் குறிப்பிட்ட தேவையினை செய்து வருகின்றது. இதன்படி இந்த அமைப்பினர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் இவர்களது அடிப்படை தேவைகள் குறித்து கதைத்திருந்தனர். அதாவது, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு உணர்விழப்போடு வாழ்கின்ற பயனாளிகளுக்கு மெத்தை இன்றியமையாதது என்றும் மெத்தை இன்றி இவர்களால் இருக்கவோ உறங்கவோ முடியாதநிலை உள்ளது என்றும் கூறி மெத்தையின் தேவையினை எடுத்துக் கூறியிருந்தது. இதற்கமையவே வட்டுக்கோட்டை இந்து வலிபர் சங்கம் உதவி வழங்கியுள்ளது.

Read more

மைத்திரி கொலை முயற்சி தொடர்பில் சந்தேகநபருக்கு கடூழிய சிறை-

courtஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொலநறுவை மேல்நீதிமன்ற நீதிபதி அமின்டர் செனவிரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிபதி, இவ்வாறு தீர்ப்பளித்தார். 2005. 2006ம் ஆண்டு காலப்பகுதியிலேயே இக்கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொஹமது சுல்தான் காதர் மொஹிடீன் ஏ.கே.ஏ. சேனன் என்றழைக்கப்படும் சிவராஜ் ஜெனிவன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் ஷரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டபணத்தை செலுத்த தவறின் மேலதிகமாக ஒருவருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிளைமோர் குண்டை வைத்து இக்கொலை முயற்சியை மேற்கொண்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 37 வயதான சந்தேகநபர், யாழ்ப்பாணம் கோவிலடி பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவுக்கு வேட்புமனு வழங்கத் தீர்மானம்-

mahindaஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்புமனு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரணமாக எம்.பி. பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட தயார் இல்லை என தெரிவிக்கும் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடலாம் என்ற சுசில் பிரேமஜயந்தவின் அறிவிப்பை நிராகரிப்பதாகவும், தாம் புதிய கூட்டணி அமைத்து மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவ வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் 108 அம்புலன்ஸ் சேவை அறிமுகம்-

ambulanceஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயல்படுவதற்கான நிதி உதவியையும் இந்தியா அளிக்கவுள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்புலன்ஸ் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்த இந்தியாவிடம் உதவியை நாடியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச்சில் இலங்கை வந்திருந்தபோது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதன்படி ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இலங்கையிலும் 108 அம்புலன்ஸ் சேவையை அளிக்கவுள்ளது. இது குறித்து ஜிவிகே இஎம்ஆர்ஐ அதிகாரிகள் கூறுகையில், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலங்கையில் அம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இச் சேவையைத் தொடங்குவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு ரூ.50.81 கோடி நிதி உதவி அளிக்கவுள்ளது. முதற்கட்டமாக இலங்கையின் வட, தென் பகுதியில் 88 அம்புலன்ஸ் வாகனங்களுடன் இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளது. அம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற 600 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ள இந்தியாவில் பயன்படுத்தப்படும் 108 என்ற எண்தான் இலங்கையிலும் பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இ.தொ.காங்கிரஸ் ஐ.ம.சு.முன்னணியில் இணைந்து போட்டி-

cwcஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதென. இதொகா தலைவர் முத்து சிவலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த பத்தாண்டுகளாகவே தமது கட்சி அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இணைந்து போட்டியிட்டு, அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளது என்றும் அது இந்தத் தேர்தலிலும் தொடரவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் கண்டி, பதுளை மற்றும் மாத்தளைப் பகுதிகளில் தனித்துப் போட்டியிடும் எண்ணமும் தங்களுக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை மனதில் வைத்தே கூட்டமைப்புடன் இணைந்தும், சில இடங்களில் தனியாகப் போட்டியிடுவது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை மலையகப் பகுதியில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே தளத்தில் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி-

accidentமன்னார் – இலுப்பைக்கடவை பிரதான வீதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டனர். பின்னர், குழந்தையொன்று மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகியோர் மடுத் திருத்தல ஆடித் திருவிழாவுக்கு சென்றுவிட்டு யாழ்; நோக்கி முச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் மன்னார் நோக்கி பயணித்த வானும் மோதியதாக பொலிஸார் கூறியுள்ளார்.

பதிவுத் தபால்களை விநியோகிக்க விசேட திட்டம்-

postகொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் பதிவுத் தபால்கள் தேங்கிக் கிடப்பதை தவிர்ப்பதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கடிதங்களை வகைப்படுத்துவதற்காக மேலதிக உத்தியோகத்தர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிடுகின்றார். மத்திய தபால் பரிமாற்றத்தில் நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் பதிவுத் தபால்கள் சேர்வதாகவும் தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டினார். இதனால் கொழும்பிலுள்ள தபால் அலுவலகங்களில் சேர்கின்ற பதிவுத் தபால்களை மத்திய தபால் பரிமாற்றத்திற்கு அனுப்பாது, அந்தந்த தபால் அலுவலகங்களுக்கே நேரடியாக அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் கூறினார். குறிப்பாக பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்தல், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்க விண்ணப்பித்தல் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள் காரணமாகவே கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் கடிதங்கள் தேங்கி நிற்கின்றன என்றார் அவர்.

தபால் மூலம் வாக்களிப்புக்கு விண்ணப்பம்-

postal_votes_2எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகம்மட் அறிவித்துள்ளார். 2014ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் இத்தேர்தல் நடத்தப்படவுள்ளதால் தகுதியான அரசாங்க ஊழியர்கள் தபால் மூலம்; வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு எதிர்வரும் 14ம் திகதிவரை அனுப்பிவைக்க முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதேவேளை தபால் மூலம் வாக்களிக்கும் அரசாங்க ஊழியர்களின் நன்மை கருதி இன்றுமுதல் சகல மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் வாக்காளர் இடாப்புக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை உரிய இடங்களுக்குச் சென்று பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இத் தகவல்களை பெறத்தவறுகின்றவர்கள் தேர்தல் செயலகத்தின் இணையத்தளத்தினை பிரயோகித்து பதிவுசெய்யப்பட்டுள்ள மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் எனபனவற்றினை உட்பிரயோகிப்பதன் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி-

SLMCஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையை ஒரேநாள் சேவைக் கட்டணம் அதிகரிப்பு-

NICதேசிய அடையாள அட்டை ஒருநாளில் பெற்றுக்கொள்ளும் சேவைக்காக அறவிடப்படும் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இந்த சேவைக்காக அறவிடப்படும் கட்டணம் 500 ஷரூபாவிலிருந்து 1000 ஷரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கூட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் எவ்வித முடிவையும் எமது கட்சி எடுக்காது-புளொட் தலைவர் சித்தார்த்தன்-

D.Sithadthanகூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுத்தேர்தல் குறித்து கட்சிப் பிரமுகர்களுடன் அண்மையில் கலந்துரையாடினோம். இதற்கிணங்க மட்டக்களப்பு, வன்னி போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. மட்டு, வன்னி மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும். அதன் பின்னரே வேட்பாளர் சம்பந்தமாக உத்தியோகபூர்வ முடிவுகள் எடுக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எந்தவொரு நபரையும் எமது கட்சி சார்பாக நிறுத்துவதற்கு முடிவெடுக்கவில்லை. என்னுடன் பலபேர் தொடர்புகொண்டு சந்தர்ப்பம் தருமாறு கேட்கின்றனர். இதேபோன்றுதான் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் பாராளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் நேரில் வந்து தன்னை வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதன்போது அவருக்கு எந்தவிதத்திலும் உறுதியளிக்கவில்லை.

Read more