Header image alt text

கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் விழாவும், கௌரவிப்பு விழாவும்-

IMG_3120யாழ். கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும், உதவித் திட்ட நிகழ்வும், பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களுடைய சேவைக்கான கௌரவிப்பு விழாவும் நேற்று பிற்பகல் 2மணியளவில் நடைபெற்றது. பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்கள் அந்தப் பகுதியிலே இருக்கின்ற பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக மிகப் பெரிய அளவிலே உதவி வருகின்றவர். மேற்படி கழகத்தின் விழாவும், பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களின் கௌரவிப்பு விழாவும் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் தலைவர் செ.ஜெகபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், திரு. சிவலிங்கராஜா (பேராசிரியர், யாழ். புல்கலைக்கழகம்), திருமதி ரி.ஆன்னலிங்கம் (பிரதேசசபை செயலாளர் நல்லூர்), திரு. கிருஸ்ணராஜா (வரலாற்றுத்துறைப் பேராசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலைய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_3088யாழ். நல்லூரடி முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத்தில் அதன் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது. இந்நிகழ்வானது அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர் அமைப்பின் அனுசரணையுடன் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத் தலைவர் திரு. தர்மசேகரம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு மேற்படி கல்வி ஊக்குவிப்புக் கொடுப்பனவு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலைய செயலாளர் திரு. ஜசிந்தன் கனடாவிலிருந்து வருகை தந்துள்ள சமூக ஆர்வலர் திரு. கணேசலிங்கம் (வானொலி நிலைய இயக்குநர் கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்;தப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து மாதாந்தம் பத்துப் பிள்ளைகளுக்கான நிதியினை வழங்கி வருகின்றார்கள். Read more

வவுனியா கல்வியியற் கல்லூரியில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)
photo (1)மாகாண மட்டத்திலான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் வவுனியா கல்வியியற் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. ஆனோல்ட், திரு. கந்தையா சிவநேசன்(பவன்) திரு. பியதாச மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், அதிகாரிகள்  வவுனியா கல்வியியற் கல்லூரியின் துணைப் பீடாதிபதி மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு.ரவீந்திரன், விளையாட்டுப் பிரிவு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

Read more

க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு-

20151101_0830512015ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகளை முன்னேற்றும் வகையிலான மாபெரும் இலவச கல்விக் கருத்தரங்கு நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் நேற்றுக்காலை 8மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. சமூக ஆர்வலரும், சமாதான நீதவானுமான திரு. கெங்காதரன் அவர்களது ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிகழ்விற்கான அனுசரணையினை தலவாக்கலை ஐங்கரன் ஸ்ரோர்ஸ் மற்றும் நியூ ஸ்பீட் சைற் ஆகியன வழங்குகின்றன. யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற கணிதபாட ஆசிரியர் திரு. மணிவண்ணன் அவர்கள் இந்த இலவச கருத்தரங்கினை நடாத்தி வருகின்றார். இந்நிகழ்வில் 500ற்கும் மேற்பட்ட 2015ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டுள்ளனர். நேற்றையதினம் கணித பாடத்திற்கான கருத்தரங்கு நடைபெற்றதுடன், இன்று விஞ்ஞானபாடம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. நாளையதினம் தமிழ் பாட கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின்போது; 50கேள்விகள் கொடுக்கப்படும். இக் கேள்விகளுக்கான சரியான பதில் வழங்கும் மாணவ, மாணவியர் 50பேருக்கு 500ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு. கெங்காதரன், புhடசாலை அதிபர்கள் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆலய பரிபாலனசபையினர், ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

Read more

தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-அமைச்சர் திலக் மாரப்பன-(படங்கள் இணைப்பு)

IMG_3029சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் திலக் மாரப்பன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முறையான சட்டங்கள் இருக்கின்ற போதிலும், நீதிமன்றங்களில், வழக்குகள் பத்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்ற வேடிக்கை நிகழ்வதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன நேற்று யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தினால், யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டிடத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். புலிகள் இயக்க சந்தேகநபர்கள் என்பதற்காக அவர்களுக்கென வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீண்ட நாட்களாக சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் யுத்தம் முடிந்துவிட்டது, இப்பொழுது அவர்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூற முடியாது. அவ்வாறு எவரேனும் அச்சுறுத்தலாக இருப்பார்களாயின் அவர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதித்து அவர்களைக் கண்காணிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு-

human rightsபல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நேற்று மேற்கொண்ட தாக்குதல் குறித்து உலமா கட்சி ஏற்பாட்டில் ஜாதிக பலய அமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. இலங்கையின் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து அண்மையில் ஜாதிக பலய எனும் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர் ஆரியவங்ச திசாநாயக்க மற்றும் உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோர் இந்த அமைப்பில் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தங்கள் கல்விக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நேற்று மேற்கொண்ட மிக மோசமான தாக்குதலை ஜாதிக பலய வன்மையாகக் கண்டித்துள்ளது. அத்துடன் ஜாதிக பலய அமைப்பின் ஏனைய உறுப்பினர்களான சரத் மனமேந்திர, ஜயந்த குலதுங்க ஆகியோருடன் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் உள்ளிட்டோர் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளனர். பொலிஸாரின் அராஜகம் கட்டுப்படுத்தப்பட்டால் நல்லாட்சி என்பதற்கான அர்த்தம் கெட்டுப்போகும் என்றும் ஜாதிக பலய முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சி.என்.என் இயக்குனருக்கு சமூக சேவைக்கான கனடாவின் உயரிய விருது-(படங்கள் இணைப்பு)

Award-Tamilcnn-Canada-3-6-600x400தமிழ் சி.என்.என் இயக்குனரும், உலக பசியொழிப்பு மன்றத்தின் (Hunger Free World Foundation)) நிறுவனருமான அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களும், தமிழ் சி.என்.என் இன் தலைவர் (கனடா), உலக பசியொழிப்பு மன்றத்தின் (Hunger Free World Foundation) தலைவர் (கனடா) வி.எஸ் துரைராஜா அவர்களும் மாண்புமிகு எலிசபெத் மகாராணியின் கனடா நாட்டின் ஒன்ராறியோவுக்கான அரசுப் பிரதிநிதியும், ஒன்ராறியோ மாகாணத்தின் மாண்புமிகு ஆளுநர் Lieutenant Governor of Ontario) Elizabeth Dowdeswell அவர்களிடமிருந்து சமூக சேவைகளுக்கான இரண்டு விருதுகளினைப் பெற்றுக் கொண்டுள்ளனர். The national ethnic press and media council of canadaவின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு கடந்த 30.10.2015 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஒன்ராறியோ நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் சி.என்.என் இனைப் பிரதிநிதித்துவப் படுத்தி இருவர் உட்பட கனடாவில் பொதுச் சேவை உட்பட பல்வேறு சேவைகளிலும் திறமையாகச் செயற்பட்ட 11 பேருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சமூக சேவைக்கான விருதினைப் பெற்ற தமிழ் சி.என்.என் இயக்குனரும், உலக பசியொழிப்பு மன்றத்தின் (Hunger Free World Foundation) நிறுவனருமான அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், உண்மையில் எமது மக்களுக்கு ஏராளமான தேவைகள் இருகின்றன அவர்கள்தம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்கள் ஆகின்றனர். Read more

ரஷ்ய விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது-

russian flightஎகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் நேற்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 17 குழந்தைகள் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகச்செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் எகிப்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கோரச் சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள எகிப்து அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பூஜித்த ஜெயசுந்தர பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம்-

pujith-jayasuntharaமேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உகாண்டாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையே இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் ஐந்தாம் திகதிவரை பூஜித்த ஜெயசுந்தர பதில் பொலிஸ் மா அதிபராக கடமைகளை மேற்கொள்ளவுள்ளார். மேலும் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க செயற்படுவார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக்கலைப்புக்கள்-

abortionஇலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு கூறியுள்ளது. அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம் பேசிய கிழக்கு மாகாண சமூகநல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ்.அருள்குமரன், கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரச மருத்துவமனைகளில் நடப்பதாகவும், ஆனாலும் சில சட்டவிரோத நிலையங்கள் இதற்காக செயற்படுவதாகவும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சமூகநல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ்.அருள்குமரன், குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தாய்லாந்து பயணம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு நாட்கள் உத்தியோகப்பபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார். இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறித்தான நிகழ்வுக்கு, தாய்லாந்து பிரதமரின் அழைப்பையேற்றே ஜனாதிபதி தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார். இவ்விஜயத்தின்போது, இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயும் பொருளாதார, சமூக மற்றும் மத உறவுகள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

இலங்கையில் மதச்சுதந்திரம் முக்கியமானது–அமெரிக்கா-

abdul kashapஇலங்கையில் மதச்சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்று அமெரிக்காவின் தூதுவர் அத்துல் கசாப் தெரிவித்துள்ளார். கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் கூறியுள்ளார். அமெரிக்காவில் மத சுதந்திரத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையே அந்த நாட்டின் மிகப்பெரிய சக்தியாக காணப்படுகிறது. இலங்கையிலும் பல மதத்தவர்கள் உள்ள நிலையில், அவர்கள் தங்களின் நம்பிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று அத்துல் கசாப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.