தழிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்

indexதழிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தழிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன்படி யாழ் மாவட்டத்தில் இன்று காலை 09.00 மணியளவில் இருந்து இரவு 09.00 வரை அனைத்து சந்தைக் கடைத்தொகுதிகள், வியாபார தளங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

யாழ் மாவட்ட பேருந்துகளின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்றைய தினம் பருத்தித்துறை –  யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது மந்திகை சந்திக்கு அருகில் இனம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த பேருந்தின் மீதான கல் வீச்சு தாக்குதலினை அடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் அணைந்து பேருந்துக்களின் சேவைகள்  நிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் பேருந்து சேவைகள்  இன்று காலை முதல் நிறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக யாழ் மாவட்டத்தில் அனைத்து இடங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன.
 
Kili hartalகிளிநொச்சி நகரத்தில் கடைகளை பூரணமாக மூடி கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுவருவதால் புற்று நோய் போதனா வைத்தியசாலை ஒன்றை திறந்து வைக்கும் மட்டக்களப்பிற்கான ஜனாதிபதியின் விஜயம் ரத்து.

vavuniyaவுனியா நகரத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது. இன பேதமற்ற ரீதியில் வர்த்தக நிலையங்களை மூடி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

இதனால் வாத்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் மூடப்படடிருந்தன. நீண்ட தூர மற்றும் குறுய தூர போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை. ஹர்த்தால் காரணமாக நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ளது. அரச நிறுவனங்கள் பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் மூடி விடுமாறு தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு கட்சி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.