Header image alt text

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்-

budget (2)எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

கடந்த அரசாங்கத்தைப் போல அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது.

தமது புதிய அரசாங்கம் மூலம் தேசிய பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும். Read more

ploteஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) கட்சியினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேண்டுகைக்கு இணங்க, அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.

கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
மாண்புமிகு ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.

கடந்த 23.10.2015 அன்று தங்களால் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்ட எமது வாய்மூல பரிந்துரைகளை எழுத்தில் சமர்ப்பிக்குமாறு நாம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க எமது கட்சியின் எழுத்துமூல பரிந்துரைகளை இத்தால் சமர்ப்பிக்கிறோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எமது கட்சியின் இந்தப் பரிந்துரைகள், எதிர்காலத்தில் தங்களால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற இன நல்லிணக்க முயற்சிகளுக்குத் தமிழ் மக்களின் ஆதரவினையும், நம்பிக்கையையும் பெற்றுத்தரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
Read more

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க குழு நியமனம்-

ranil wickramaநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தலைவர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
விஜேதாஸ ராஜபக்ஷ
டி.எம். சுவாமிநாதன்
நிமல் சிறிபால டி சில்வா
சுசில் பிரேமஜயந்த
லக்ஷ்மன் கிரியெல்ல
மலிக் சமரவிக்ரம
சம்பிக்க ரணவக்க
மனோ கணேசன்

புகலிடக் கோரிக்கையாளர்கள் இடைமறிப்பு-

boatஅவுஸ்ரேலியா கிறிஸ்மஸ் தீவு கடற்பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்றை அந்நாட்டு கடற்படையினர் இடைமறித்துள்ளனர். குறித்த படகில் 8 பேர் பயணம் செய்துள்ளதாகவும் இவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருக்கலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. அத்துடன் படகில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என இதுவரை தகவல் வெளியிடப்படாத நிலையில், அவர்கள் கடற்பாதுகாப்பு அதிகாரிகளினால் நடுக்கடலில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அகதிகள் செயற்பாட்டாளர் இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த படகு இடைமறிக்கப்பட்டமை தொடர்பில் அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. இதேவேளை, சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்ரேலியாவிற்கு புகலிடம் கோருவோர் கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டு பப்புவா நியுகினி மற்றும் நவ்ஷரூ தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்

ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை-

fdfdfdநாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒஷதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார். இறக்குமதி வரிகள் இன்றி தங்கம் இறக்குமதி செய்வதற்கான விஷேட அனுமதிப்பத்திரங்கள் 50இனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார். அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்த இரத்தினக்கல் ஏல விற்பனை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

64சதுர கிலோமீற்றர் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை-

mineவடக்கு, கிழக்கு மாகாணங்களின் 64 சதுர கிலோமீற்றர் பகுதியில் இன்னும் கண்ணி வெடிகள் அகற்றப்படாமலிருப்பதாக கண்ணிவெடியை தடை செய்வதற்கான இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. போர் சூழலின் போது கண்ணி வெடிகளை தடை செய்வது மற்றும் இலங்கையில் கொத்தணி குண்டுகளை தடைசெய்வது தொடர்பான இரண்டு மகஜர்கள் குறித்தும் இலங்கையில் அங்கவீனமானவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்கள் பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. முகமாலை, கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளிலுள்ள 64 சதுர கிலோ மீற்றரில் இதுவரை கண்ணி வெடிகள் முழுதாக அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு கண்ணி வெடி பாதிப்பு நிலவிய 2064 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இதுவரை 2000 சதுர கிலோமீற்றர் பகுதியிலுள்ள கண்ணி வெடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.