Header image alt text

பரிஸ் நகர தாக்குதல் பாதிப்பு தொடர்பில் இலங்கையர் தகவல்களைப் பெற…

paris01பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் நூற்றக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் கீழுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு இலக்கங்கள் 94112445264 அல்லது 0774919796, நஸீர் மஜீட் 33620505232 அல்லது குணசேகர 33677048117. இதேவேளை பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களில், ஆகக் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கையை, பிரான்ஸின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் 6 பகுதிகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவம், குண்டுவெடிப்பு, பணயக் கைதிகளாகப் பிடித்துவைப்பு என, இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலாளிகள் நால்வரை பொலிஸார் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதி பிராங்கொஸ் ஹொலன்டே, பரிஸ{க்கு இராணுவத்தினரையும் அனுப்பி வைத்துள்ளார்.

வெள்ளநீர் புகுந்ததால் சிலாபம் வைத்தியசாலை நோயாளர்கள் இடமாற்றம்-

floodமழை வெள்ள நீர் உட்புகுந்ததால் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் சிலரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலாபம் வைத்தியசாலையின் அறை இலக்கம் 04 மற்றும் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் இவ்வாறு இடம் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் தேசிய வைத்தியசாலைக்கும் ஏனைய அறைகளில் இருந்த நோயாளர்கள் மாரவிலை மற்றும் குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுதவிர மழை வெள்ளம் காரணமாக சிலாபம், மாதம்பை மற்றும் முந்தலம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிலாபம் முன்னேஸ்வரம், நல்லநாயகம் குளத்தின் அணைக்கட்டு அபாய நிலையில் இருப்பதனால் அதற்கு மண் மூடைகளை நிரப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் ஏழாவது நாளாக தொடர்கிறது-

jailதமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத்ததில் ஈடுபட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று நேற்று வெளியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார கூறியுள்ளார். இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 32 பேரில் 24 தமிழ் கைதிகள், அவர்களுக்கான பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்த பின்னர் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டு சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். பிணை வழங்கப்பட்டுள்ளவர்களில் பெண் ஒருவர் உட்பட எஞ்சியுள்ள தமிழ் கைதிகளை, எதிர்வரும் திங்கட்கிழமை பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்த பின்னர் அவர்களின் உறவினர்களால் அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் ரோஹண புஷ்பகுமார மேலும் கூறியுள்ளார். இதேவேளை, தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் காரணமாக 2 மாகாணங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததுடன், பொது மற்றும் தனியார் துறைகள், வர்த்தக நடவடிக்கைகள் உட்பட அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

paris02paris01பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் பல்வேறு இடங்களில் (6இடங்கள்) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 140-க்கும் மேலாக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப்பகுதியில் பட்டாக்கிளன் என்ற கான்சர்ட் ஹாலுக்குள், (இசை அரங்கிலேயே மிக அதிக அளவிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ) துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இந்த திடீர் தாக்குதலால் பலர் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பிணையக்கைதிகளாக இருந்த 100 பேர் உட்பட 115 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Read more

சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தீபாவளி விருந்தும் கலைநிகழ்வுகளும்

parathi02தீபாவளி தினத்தன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களான பாரதி இல்லம்(முள்ளியவளை) இனிய வாழ்வு இல்லம்(புதுக்குடியிருப்பு) ஆகியவற்றுக்கு சிறப்பு மதிய உணவுகளும் மாலை நேர சிறப்பு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
புதுக்குடியிருப்பில் உள்ள இனியவாழ்வு இல்லத்தில் 53 அங்கவீனமுற்ற ஆண் பெண் பிள்ளைகள் உள்ளனர். முள்ளியவளையில் உள்ள பாரதி இல்லத்தில் 108 பெண் பிள்ளைகள் உள்ளனர் இவர்களுக்கு தீபாவளி நன்னாளில் சுவிஸ் நாட்டை சேர்ந்த கஜேந்திரரன்(கஜன்) பாரதி இல்லம் அன்பு இல்லம் ஆகியவற்றுக்கு சிறப்பு மதிய உணவை வழங்கி வைத்ததுடன் லண்டன் நாட்டை சேர்ந்த லோகஞானம்(லோகன்) இனியவாழ்வு இல்லத்திற்க்கு மற்றும் திருமதி சந்திரரதி கணேஸ்(அமேரிக்கா) அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாரதி இல்லத்திற்க்கும் மாலை நேர சிறப்பு சிற்றுண்டிகளை வழங்கியுள்ளார்கள். அத்துடன் செஞ்சோலை Read more