இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு, நிறுவனர் நினைவு, மெய்யொளி நூல் வெளியீட்டு நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
யாழ். இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவனர் நினைவுநாளும், மெய்யொளி நூல் வெளியீடும் இன்றுகாலை 9மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. அ.இரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ந.ஈஸ்வரநாதன் (கோட்டக்கல்வி அதிகாரி தெல்லிப்பளை) அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது வணபிதா யேசுதாஸ்(இளவாலை சென்ற் ஹென்ரீஸ் பாடசாலை அதிபர்), பாலச்சந்திரக் குருக்கள் ஆகியோரை ஆசியுரையினை வழங்கினார்கள். தொடர்ந்து திரு.சுதர்சன் (ஊர்காவற்றுறை பிரதேசசபை செயலாளர்), திரு.ரிஷாந்தன் (முகாமைத்துவ உதவியாளர்) பிரதேச செயலகம் ஊர்காவற்றுறை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதன்போது பாடசாலைப் பி;ள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றதோடு தொடர்ந்து பரிசளிப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டிருந்தனர். Read more