ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரான்ஸ் விஜயம்-

maithri24வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மோல்டாவில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பிரித்தானிய மகாராணியின் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேவேளை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தபின் பிரான்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த மாநாடானது பிரான்ஸின் லி பொர்கேர்டில் நகரில் நாளை முதல் டிசம்பர் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஐ.நா பொதுச் செயலர் பான்கீமூன் உள்ளிட்ட 147 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்-

al hussainஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அவரது இலங்கைக்கான மேற்படி விஜயம் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெறவிருந்தது. எனினும் பல்வேறு காரணங்களால் அவருடைய இந்த விஜயம் பிற்போடப்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த வருட ஆரம்பத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

மட்டு.போதனா வைத்தியசாலையில் 52,349 குழந்தைகள் பிறப்பு-

child birthகடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 52349 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தயசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு குழந்தைகள் பிறந்துள்ளன. சாதாரண பிரசவத்தினூடாக 34207 குழந்தைகுளும், சத்திர சிகிச்சையூடாக 15454 குழந்தைகளும், ஆயுதங்கள் பாவித்து 2488 குழந்தைகளும் பிறந்துள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 2011ம் ஆண்டு 11206 குழந்தைகளும், 2012ம் ஆண்டு 9674 குழந்தைகளும், 2013ம் ஆண்டு 13432குழந்தைகளும், கடந்த ஆண்டு 12103 குழந்தைகளும் பிறந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைப் பிரசவித்திற்கான 46388 தாய்மார்கள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் பாராட்டு-

australia canadaஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மோல்டாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின்போது கனடா மற்றும் அவுஸ்திரேலியா பிரதமர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய கலந்துரையாடலின்போது புதிய அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பி்ன்னர் அனைத்து இனங்களிடையேயும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டஙக்ள் குறித்து அதிக அவதானத்துடன் உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இதன்போது கூறியுள்ளார். Read more