Header image alt text

சிதம்பரபுரம் மக்களுக்கு வட மாகாண சபையால் உலருணவு உதவிகள்-(படங்கள் இணைப்பு)

565656555‪‎வட‬ மாகாண சபை விவசாய அமைச்சின் நிதி உதவியிலிருந்து சிதம்பரபுரம் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. அப்பகுதி‬ பொது அமைப்புக்களின் அழைப்பின்பேரில் வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை 22.11.2015 அன்று பார்வையிட்டபோது அம்மக்களின் உடனடி தேவையாக உலருணவுப் பொருட்கள் தேவைப்பட்டது. வவுனியா மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், நடராஜ், இ.இந்திரராஜா ஆகியோருடன் கலந்துரையாடி விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் தொடர்புகொண்டு விபரத்தை தெரியப்படுத்தியதுடன் விவசாய அமைச்சின் நிதி உதவியுடன் சிதம்பரபுரம் கிராமம், சிதம்பரபுரம் முகாம், பழைய கற்குளம் போன்ற மக்களுக்கு 24.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்) இ.இந்திரராசா அவர்களின் செயலாளர் மற்றும் அக் கிராமங்களின் பொது அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
Read more

வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரணதண்டனை விதிப்பு-

vas gunawardenaபிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளார். அத்துடன் வாஸ் குணவர்த்தனவின் மகன் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்களும் குற்றவாளிகளாக இணங்காணப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்கள் ஆகிய ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மொஹமட் சியாமை கொலை செய்தமை, அதற்கு சதித் திட்டம் தீட்டியமை, கடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரால் இவர்களுக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி அறிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த ஆறு பேரும் குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டது. இதன்படி முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட்ட 06 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லலித் ஜயசூரிய, சரோஜினி வீரவர்தன மற்றும் அமேந்திர செனவிரட்ன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

மாணவனின் மரணத்தையிட்டு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்-கூட்டமைப்பு-

tna (4)18 வயது மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம், பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18வயது மாணவனின் இந்த செயல், சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயம். அதற்காக அவரது குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்விதமான ஒரு சூழலில் எல்லோரும் அமைதி காக்க வேண்டியது அத்தியாவசியமான தேவை. எவ்விதமான வன்முறையும் இல்லாமல் எங்களுடைய மனவருத்தத்தையும் அனுதாபத்தையும் ஒற்றுமையாக தெரிவிப்போம், பகிர்ந்து கொள்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சும்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் பெயரில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளனர்-வியாழேந்திரன் எம்.பி-

viyalendranஅரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்கள் பிழைகள் எதனையும் செய்யவில்லை என நான் கூறவில்லை. எனினும் அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனைகளை விடவும் அதிகளவு தண்டனையை அனுபவித்துள்ளனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மீனவர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் எவ்வித நலன்களும் வழங்கப்படவில்லை. அரச ஊழியர்களின் சம்பளங்கள் வருடாந்தம் 2000 ரூபாவிலேனும் அதிகரிக்கப்பட வேண்டும். மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. கல்விக்காக கூடியளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. அதில் வடக்கு கிழக்கின் கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோருகின்றேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பத்து எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு-

kiriyellaஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டதில் ஒன்றிணைந்த எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற வரவுசெலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியேல்ல இதனைத் தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவை அரசாங்கத்திற்கு நல்கவேண்டும். எதிர்வரும் 6மாதங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளார்.

25 இலட்சம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது-

arrest (30)25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொ{ஹவல பிரதேசத்தில் இவர் கைது செய்யப்ட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வைத்தியர் ஒருவரினால் இழைக்கப்பட்ட தவறிற்கு வழக்கு தொடராமல் இருக்க 25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உயரதிகாரி, குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டா மாநாட்டில் உரை-

maithri24வது பொதுநலவாய நாடுகளின் அமர்வில் பங்குகொள்வதற்காக மோல்டா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 அளவில் அவர் உரையாற்றவுள்ளார். 24வது பொதுநலவாய நாடுகளின் மாநாடு மோல்டாவில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும், பொதுநலவாய மாநாட்டின் அமர்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மோல்டாவின் வெலேடா நகரில் இடம்பெறுகின்றது.