Header image alt text

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தோழமை தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

20151122_180931ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)இன் செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் 64ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று தோழமை தினம் இடம்பெற்றது. முன்னைநாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களாலும், ஈ.பி.ஆர்.எவ்.எவ்-பத்மநாபா கட்சியினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ். ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைநாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களது தலைமையில் இன்றுமுற்பகல் 11மணியளவில் ஆரம்பமாகி மாலை 7மணிவரையில் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறீகாந்தா, முருகேசு சந்திரகுமார், வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் (பவன்), ஜி.ரி. லிங்கநாதன் (விசு), வட மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராஜா ஆகியோரும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். இங்கு உரையாற்றிய அனைவரும், தமிழ் கட்சிகள் மத்தியிலே குறைந்தபட்சம் ஒரு ஒற்றுமைப்பாடு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற தொனியில் உரையாற்றினார்கள். இதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதி திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)

20151122_092105யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கான கட்டிடம் இன்றுகாலை பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ. லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி. வசந்தி அரசரட்ணம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான், டீ சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பீ.எஸ்.எம் குணரத்ன, அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றும்போது, யாழ் பல்கலைக்கழக கல்வி வளர்ச்சிக்கும், வட மாகாண கல்வி வளர்ச்சிக்கும் மேலதிக நிதியினை ஒதுக்குவதாக தெரிவித்தார். Read more

சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய பெயர்கள் தம்மிடமிருப்பதாக யாஸ்மின் சூக்கா தெரிவிப்பு-

jasmni xookaதிருகோணமலையில் இருப்பதாக கூறப்படும் இரகசிய சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த விபரங்கள் தங்களிடம் இருப்பதாக, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின் கள் சூக்காவின் தலைமையிலான தன்னார்வ குழு ஒன்று தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இயங்கும் இலங்கையின் நீதி மற்றும் உண்மைக்கான வேலைத்திட்டம் என்ற இந்த அமைப்பு இதனைக் கூறியுள்ளது. குறித்த அதிகாரிகளே கைதுசெய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களை இந்த சித்திரவதை முகாமிற்கு மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. திருமலையில் செயற்பட்டு வந்த குறித்த முகாம் தொடர்பில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு தகவல் வெளியிட்டிருந்தது. இம் முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தங்களின் ரத்தத்தினால் முகாமின் சுவரில் எழுதி வைத்திருப்பதாகவும் குறித்த செயற்குழு கூறியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மூவர்; கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமந்தா பவர் அரச உயர்மட்ட பிரதிநிதிகளுடன் சந்திப்பு-

ertrtஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். மேலும் இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்தபின் நேற்றுமாலை சமந்தா பவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். இதேவேளை இவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றையும் மேற்கொண்டு வடமாகாண ஆளுநர் எச்.எம்.பள்ளியக்காரவை ஆளுநர் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற சந்திப்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் அவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது-

arrestஅதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றில் பயணித்தவரை, எல்ல-வெல்லவாய வீதி, ராவனா எல்ல பகுதியில் வைத்து பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரிடமிருந்து வோடர் ஜெல் ரகத்தைச் சேர்ந்த அதிசக்திவாய்ந்த 700 கிராம் வெடிமருந்து, ஜெலிட்னைட் குச்சிகள் 5, 6 கிலோகிராம் 250 கிராம் அமோனியம் நைட்ரைட், 64 அடி நீளமுள்ள சேவா நூல் -2, டெடனேட்டர் 10 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் 6ஆவது கடல் சார் மாநாடு நாளை ஆரம்பம்-

34445இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள 6 ஆவது சர்வதேச கடல் சார் மாநாடு நாளை முதல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை காலியில் நடைபெறவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 4 கடற்படை தளபதிகள் பங்கேற்கவுள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் 37 நாடுகள் 10 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

சமந்தா பவர் வட மாகாண முதலமைச்சர் சந்தித்துப் பேச்சு-

vignes samanthaதமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்து பெற்றுத் தருவோம் என, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் அலுவலகத்தில இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். சமந்தா பவருடனான சந்திப்பு குறித்து விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், எமது சந்திப்பு மிகவும் நன்மை பயக்குமென எதிர்பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றார். இலங்கையில் ஜனநாயகத்தினை வரவழைக்க வேண்டும் என்பதுடன், அமெரிக்காவும் ஜனநாயக நாடு என்பதில் இலங்கையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதில் சந்தோசப்படுவதாகவும், தம்மாலான சகல உதவிகளையும் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். Read more

எட்டு புலம்பெயர் அமைப்புக்களின் தடை நீக்கம்-

governmentநாட்டில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலேயே சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் நிதி உதவி வழங்கியமை போன்ற காரணங்களின் அடிப்படையில் சில புலம்பெயர் அமைப்புக்களுக்கும் நபகர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த பட்டியலில் இருந்த 08 அமைப்புகள் மற்றும் 269 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகள் மற்றும் நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் செய்யத மீளாவை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த திருத்தம் அடங்கிய 1941ஃ44 என்ற இலக்கமுடைய அதி விசேட வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்பும் விதம் தொடர்பில் அவதானம் செலுத்தபட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். Read more