Header image alt text

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன்(பவன்) வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு)-

MC member help (6)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் ஊடாக ஆடுகள், கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிக்கூடுகள் என்பன இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து இருபது குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இன்றுகாலை 10மணியளவில் வழங்கப்பட்டுள்ளன. இதில் பன்னிரண்டு குடும்பங்களுக்கு கோழிகளும் கோழிக்கூடுகளும், எட்டுக் குடும்பங்களுக்கு ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன், வன்னிப் மேம்பாட்டுப் பேரவை மற்றும் சாய் சமுர்த்தி என்பவற்றின் தலைவர் திரு. தவராஜா மாஸ்டர், கால்நடை அபிவிரு;தி திணைக்கள அதிகாரி வைத்தியக்கலாநிதி தயாபரன், வைத்திய அதிகாரிகள், கால்நடை அபிவிருத்திச் சங்கத் தலைவர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு. யசோதரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். Read more

இடம்பெயர்ந்த பேராறு மக்களை மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்) சந்தித்தார்-(படங்கள் இணைப்பு)

periyaru (1)கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பேராறு பிரதேச மக்களை வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு, உலருணவு உள்ளிட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒட்டிசுட்டான் பேராறு பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இவர்களுள் 98 குடும்பங்கள் வெள்ளத்தினால் வீடுகளிலே இருக்கமுடியாத நிலையில் இடம்பெயர்ந்து பேராறு பாடசாலையில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கான உணவு, உலருணவு உதவிகள் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read more

பாதிக்கப்பட்ட பண்டாரவன்னியன் பிரதேச மக்களை பார்வையிட்ட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்)-(படங்கள் இணைப்பு)

pandara vanniyanllஅடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தங்கியிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் கிராம மக்களை வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்குத் தேவையான உணவு, உலருணவு உள்ளிட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பண்டாரவன்னியன் பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இவர்களுள் 05 குடும்பங்கள் வெள்ளத்தினால் வீடுகளிலே இருக்கமுடியாத நிலையில் இடம்பெயர்ந்து பேராறு பிரதேச தேவாலயத்தில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கான சமைத்த உணவினை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன், நிவாரணங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

முத்தையன்கட்டு பாடசாலையில் தங்கியுள்ள மக்களை நேரில் பார்வையிட்ட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்)-(படங்கள் இணைப்பு)

muthaiyankattujhதொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு இடதுகரைப் பிரதேச மக்களை வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்குத் தேவையான உணவு, உலருணவு உள்ளிட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். வெள்ளத்தினால் முத்தையன்கட்டு இடதுகரைப் பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் 65 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பிரதேச பாடசாலையில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கான உணவு, உலருணவு நிவாரணங்கள் வழங்குவது பற்றி மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) ஆராய்ந்ததுடன் அவர்களுக்கான உதவிகளுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் முதலமைச்சருக்கு அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமை செயலகத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கனடா கிளையினரால் பாடசாலை மாணவர்களுக்கு ஜந்து துவிச்சகர வண்டிகள் அன்பளிப்பாக நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியாக துவிச்சக்கர வண்டிகளுக்கு விண்பித்திருந்த வட்டு மத்திய கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி(வட்டுக்கோட்டை) மற்றும் இராமணாதன் கல்லூரி(மருதனாமடம்) ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இவ் துவிசக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை செய்துவருகின்றனர் இதில் ஒரு அங்கமாகவே இம் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சங்க காரியாலத்தில் சங்க தலைவர் கு.பகீரதன் தலைமையில் இடம்பெற்றது. Read more

பயங்கரவாதத் தடை சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம்-

law helpபயங்கரவாதச் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்சட்டம், அப்போது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்த பின்பு இந்த சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானமும் இச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன, பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலான புதிய சட்டத்தை வரைந்து வருவதாக தெரிவித்துள்ளன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு பயங்கரவாதத்தையும் எதிர்க்க சர்வதேச தரத்திலான சட்டமாக இது அமையும்.

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது-

jailதமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் கைதிகள் 9 ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகளில் நால்வர் சுகவீனமுற்ற நிலையில் நேற்று பிற்பகல் முதல் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளில் 32 பேருக்கு கடந்த வாரம் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 24 தமிழ் கைதிகள் பிணை நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். எஞ்சியுள்ளவர்களின் பிணை தொடர்பிலும் அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தார்.

ஐ.நா யாழ். கிளை அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்-

243444தமிழ் அரசியல் கைதிகளை விடுக்கக் கோரி இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவகத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் முன்னணி மற்றும் மன்னார் மக்கள் பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியூறுத்தி இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் கைதிகள் சிறைக்குள் நடாத்தும் உண்ணாவிதரப் போராட்டம் நியாயமானதே அவர்களை உடன் விடுதலை செய், உலகுக்கு நல்லாட்சி வேடம் தமிழருக்கு கொடுங்கோலாட்சியா, சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா, சர்வதேசமே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அரசியல் கைதிகள் எண்மர் பிணையில் செல்ல அனுமதி-

customsஅரசியல் கைதிகள் 8 பேரை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 216 அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் 24பேர் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் சென்றுள்ளனர். அதேநேரம் 40 பேர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். எஞ்சியவர்கள் புனர்வாழ்வு செயற்பாட்டிற்கு உள்ளாக விருப்பம் தெரிவித்து கடிதத்தை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர்களை புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கி விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருந்தார்.

அசாதாரண காலநிலையால் மக்கள் பாதிப்பு-

rainவடக்கில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேசத்தில் நேற்று இரவு வீசிய கடும் காற்றின் காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், குருநாகல் மாவட்டத்தில் அசாதாரண காலநிலை தொடர்கிறது. இதனால் இந்த மாவட்டத்தில் ஹிரிபிட்டிய, ஹிரியால போன்ற பிரதேசங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. குருநாகலில் இருந்து ஹிரிப்பிட்டிய மற்றும் இப்பாகமுவ பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிக மழை வீழ்ச்சி காரணமாக தம்புள்ளை நகரின் கண்டலம வீதி, பஹல வாவி, உணபந்துரு யாய, இப்பன்கடுவ ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்போது ஆயிரத்து 500 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more