Header image alt text

பன்னாலை கணேசா சனசமூக நிலைய தீபாவளி விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)

ganeshaயாழ். பன்னாலை கணேசா சனசமூக நிலையத்தின் தீபாவளி விளையாட்டு விழா நேற்றுமாலை கணேசா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கிரிதரன் அவர்களுடைய தலைமையில் சனசமூக நிலையத் திடலில் நடைபெற்றது. கொட்டும் பழையிலும் தகரக் கொட்டகைகள் போடப்பட்டு இந்த விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா. கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டார்கள். கன மழைக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றியும் பங்குபற்றியோர்க்கு ஊக்கும் கொடுத்தும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

வைத்திய நிபுணர் சீ.நவரட்ணம் அவர்களது முயற்சி ஓர் சிறந்த முன்னுதாரணம் ஆகும் – வடக்கு விவசாய அமைச்சர்-(படங்கள் இணைப்பு)

P1110185வலி வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட விழிசிட்டி (வித்தகபுரம்) கிராமத்திற்கு குறித்த ககிராமத்தினைச் சேந்தவரும் தற்போது பிரித்தானியாவில் வாழும் புகழ்பூத்த வைத்திய நிபுணரும் சிறந்த சமூகசேவகருமாகிய சீ.நவரட்ணம் அவர்களது முழுமையான அனுசரனை மற்றும் நிதிப்பங்களிப்புடன் கடந்த 06.11.2015 அன்று 200 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்தினருக்கு 5 பயன்தரும் பழமரக்கன்றுகள் வீதம் குறித்த கிராமத்தின் சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வானது திருமதி. கோகிலா.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ.பொ.ஐங்கரநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலி வடக்கு பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலர் அவர்களும் கௌரவ விருந்தினராக குறித்த கிராமசேவை உத்தியோகத்தரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் குறித்த வைதத்திய நிபுணர் அவர்களின் உறவினரும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் ஏற்பாட்;;டாளர்களின் விசேட அழைப்பின் பெயரில் கலந்து சிறப்பித்ததோடு ஏற்பாட்டாளர்கள் சார்பில் வடக்கு விவசாய அமைச்சருக்கு நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை தொடர்பில் பாராட்டுப் பத்திரத்தினையும் வழங்கி சிறப்பித்தார்.
Read more

மல்லாவி வைத்தியசாலை வெளிநோயாளர்பிரிவு கட்டிட திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)

kumulamunai (6)முல்லைத்தீவு மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத் திறப்புவிழா நிகழ்வு நேற்று (14.11.2015) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி எஸ். சிவமோகன், மாகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், திரு. கமலேஸ்வரன் மற்றும் மாவட்ட உதவி ஆணையாளர் பூங்கோதை ஆகியோரும், வைத்திய அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேற்படி வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடமானது எயிற்ஸ், சயரோகம், மலேரியா ஆகிய நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின்கீழ் 25மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. Read more

குமுழமுனை ஆரம்ப வைத்தியசாலையில் கட்டிட திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)

kumulamunai (5)முல்லைத்தீவு குமுழமுனை ஆரம்ப வைத்தியசாலையின் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு நேற்றையதினம் (14.11.2015) இடம்பெற்றது. வட மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இக்கட்டிடத்திற்கான நிதி வழங்கப்பட்டிருந்தது. இக் கட்டிடத் திறப்புவிழா நிகழ்வில் வட மாகாண அமைச்சர் வைத்தியக்கலாநிதி ப. சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக்கலாநிதி எஸ். சிவமோகன், மாகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், திரு. கமலேஸ்வரன் மற்றும் மாவட்ட உதவி ஆணையாளர் பூங்கோதை, வலயக் கல்விப் பணிப்பாளர் முனீஸ்வரன் ஆகியோரும், வைத்திய அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)

20151114_123338யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திரு. எஸ்.வேல்அழகன் அவர்களுடைய தலைமையில் நேற்றுக்காலை 9மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக திரு. தயாபரன் (யாழ். வலய தமிழ்ப்பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி), அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு. சிவலிங்கம் (கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர்) மற்றும் திருமதி எஸ்.வாகீசன் (அதிபர், கரந்தன் ராமுப்பிள்ளை வித்தியாலயம்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளுடன்; பாடசாலையின் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து கொட்டும் மழைக்கும் மத்தியில் இந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதன்போது பிள்ளைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

ஜனாதிபதி மோல்டாவிற்கு விஜயம்-

commonwealth24ஆவது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிவரும் 26ம் திகதி ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார். பொதுநலவாய நாடுகளுக்கு இலங்கையே தலைமை தாங்குகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பொதுநலவாய நாடுகளின் அடுத்த தலைவர் பதவி, மோல்டாவுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 26ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் மோல்டாவில் நடைபெறவுள்ளது. பொதுநலவாய தலைவர்களின் முதலாவது மாநாடு 1971 இல் சிங்கப்பூரில் நடைபெற்றது. இம் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அவ் அமைப்பின் உறுப்பு நாடு ஒன்றில் இடம்பெறும். மேலும் குறித்த மாநாடு நடைபெறும் நாட்டின் அரச தலைவர், பிரதமர் அல்லது ஜனாதிபதி மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதோடு, அடுத்த இரு ஆண்டுகளுக்கு அவரே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடப்புத் தலைவராகவும் செயல்படுவார். இதன்படி கடந்த 2013ம் ஆண்டு கொழும்பில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்படி பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். இந்நிலையில் விரைவில் அந்தப் பதவி மோல்டா அரசுக்கு செல்லவுள்ளது. இம்முறை மாநாட்டில் இங்கிலாந்தின் மகாராணியும் கலந்துகொள்ளகின்றார்.

பிரித்தானிய பாராளுமன்றக்குழு மட்டக்களப்புக்கு விஜயம்-

britishபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜென்னி டொங்கே தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற இவர்கள் இனப் பெருக்க மற்றும் பாலியில் சுகாதாரம் தொடர்பான மீளாய்வு சந்திப்பில் கலந்து கொண்டனர். வைத்தியாசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை குடும்ப திட்ட சங்க தலைவி பெமிலா சேனநாயக்க வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேவேளை பிரித்தானிய பாராளுமன்ற குழுவினரால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதாக இப்றாலெப்பை தெரிவித்தார். மேலும் பிரித்தானிய பாராளுமன்ற குழு நேற்று திருகோணமலையில் உள்ள சனத்தொகை சேவைகள் லங்காவின் மருத்துவ சிகிச்சை நிலையத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.

மழையின் பாதிப்பு தொடர்கிறது-

rain llநிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக, நாட்டின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 5719 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலயம் இதனைத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, திருகோணமலை, கம்பஹா, புத்தளம், நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரத்து 210 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 554 பேர் இடர்பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். வடமாகாணத்தில் மாத்திரம் அனர்த்த நிலைமை காரணமாக 11 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்து 421குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. Read more