ஐ.நா அலுவலகம் முன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்.

uno yaal 01uno yaal 02யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் இன்று (வியாழக்கிழமை) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள, சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு, காணாமல் போனோர் சார்பாக இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவுகள் கறுப்புத் துணியால் தமது வாய்களைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தரும்படியும், விசாரணைகள் துரிதமாக நடைபெறுவதுடன், அது மிகவும் நம்பிக்கையானதாக இருக்க வேண்டும் என்றும் காணாமல் போனோரின் உறவுகள் கேட்டுக் கொண்டனர்.

குளத்தின் அணைக்கட்டு உடைந்தது; வீடுகள் பல நீரில் மூழ்கின
 
udayar anaiமொனராகலை, மதுல்ல – கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.
இன்று காலை குளத்தினுடைய அணைக்கட்டின் 15 மீற்றர் முதல் 20 மீற்றர் வரையான பகுதி உடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கஹட்டகஸ்பிட்டிய குளத்தை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் உள்ள வீடுகள் பல நீரில் மூழ்கியுள்ளதுடன் சுமார் 20 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவத்துள்ளது.
குளத்தின் அணைக்கட்டின் உடைந்து விழுந்துள்ளதால் பிரதேசத்தில் உள்ள பயிர் நிலங்கள் பலவும் சேதமடைந்துள்ளன.
அணைக்கட்டை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பகுதியில் நாளை விழும் மர்மப் பொருள்

Appaloஇலங்கை கடற்பகுதியில் நாளை விழும் மர்ம பொருளை ஆராய்வதற்கான குழு சென்றது
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 100 கி.மீ தொலைவில் நாளை விண்ணில் இருந்து விழவுள்ளதாக கூறப்படும் மர்மப்பொருள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்று அங்கு சென்றுள்ளது. 
WT 1190 F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் தொடர்பில் தங்காளை பிரதேசத்தில் இருந்து ஆய்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முற்பகல்11.45 மணியளவில் இந்த மர்மப் பொருள் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் விழவுள்ளது.
இது 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்ட அப்பலோ விண்கலத்தின் பாகம் அல்லது அதற்குப் பின்னர் விண்ணில் செலுத்தப்பட்ட லூனா விண்கலத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதேவேளை நாளை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மியன்மார் பொதுத் தேர்தலில் சூகியின் கட்சி அமோக வெற்றி

mayanmarமியன்மார் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூ கீயின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 149 கீழ்சபை தொகுதிகளில் 135 தொகுதிகளில் சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மியன்மாரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில், மியன்மாரில் சர்வாதிகார ஆட்சிக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் பொருளாதார தடைகளை எதிர்க்கொள்ள வேண்டிய சூழ்நிலை இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அங்கு ஜனநாயக ரீதியிலான பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற்றது.
இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு தேர்தல் நடந்தது.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 149 கீழ்சபை தொகுதிகளில் 135 தொகுதிகளை சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மேலும் அவர்கள் 90 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கே.பி க்கு எதிராக 192 குற்றச்சாட்டுக்கள்; அதில் 46க்கு சாட்சிகள் இல்லை

KPவிடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பிரிவு தலைவர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி சம்பந்தமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. Read more