Header image alt text

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்

prisonersthirddayfastபயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழ் அரசியல் கைதிகளை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அவர்களின் விடுதலை மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
மிக நீண்டகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கட்டம் கட்டமாக பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
தீபாவளி தினமான நேற்று இவர்களில் சிலரை கொழும்பில் சந்தித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன், அவர்களில் 32 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்படுவர் எனக் கூறியதாக பிளாட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார். Read more

பிணை வழங்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு மீண்டும் சிக்கல்

jail-002பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 31 பேரும் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று காலை தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். Read more