இதய அஞ்சலி
தாயின் மடியில்: 09.04.1956 – இறைவன் அடியில்: 02.11.2015
திரு. கார்த்திகேசு சிவகுமாரன் (தோழர் சுப்பர்)
(யாழ். வட்டுக்கோட்டை கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி – பழைய மாணவர், ஹாக்கி விளையாட்டு வீரர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஜெர்மன் கிளையின் முன்னணி உறுப்பினர், இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உபதலைவர் ஜெர்மனி)
உண்மையான மக்கள் விடுதலையை நேசித்து
உமாமகேசுவரன் தலைமைக் கழகமதில் கால்பதித்த தோழனே!ஈழத் தமிழின விடுதலைக்காய் இறுதி மூச்சுவரை
அஞ்சாது குரல் கொடுத்து அயராது உழைத்த தோழனே!
கடல் கடந்து அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்த போதும்
தாய்நாட்டு விடுதலையை வேண்டி கழகத் தோழர்களுடன் கைகோத்து நின்ற தோழனே!
கழகத்திற்கு (புலம் பெயர் தேசத்திலும்) எத்தனையோ இடர்கள், தடைகள் வந்த போதும்
தோளோடு தோள் நின்ற தோழனே!
எமது மக்களின் இன்னல்கள் களைந்திட ஜெர்மன் இலங்கையர் ஜனநாயக முன்னணியில்
உதவித் தலைமைப் பொறுப்பேற்று செயற்பட்ட தோழனே!
சுவிஸ் கழக நிகழ்வுகளில் தோழமையோடு கலந்துகொள்ளும் தோழனே!
அனைத்து கழகக் கிளைகளுக்கும் தென்பூட்டி வந்த தோழனே!
உன் பேச்சிலும், மூச்சிலும் தமிழர் விடுதலை உணர்வை நாம் கண்டோம்.
உன் போன்ற கழகத்தோழர்களின் இழப்புக்கள் எம் நெஞ்சங்களில்
பேரிடியாய் வந்து வந்து விழுகின்றபோதும்.
எமதருமைத் தோழர்களின்; சுதந்திர உணர்வுகளையும், கனவுகளையும்
எமதின அடிமைவிலங்கொடிக்கும் வரை மனதில் சுமந்து செல்வோம் நாம்.
தோழனே சுப்பண்ணா! மீண்டும் எமது தாய்மண்ணில் பிறப்பாயாக
தோழர் சுப்பண்ணா பிரிவால் துயர்றுற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தார், ஜேர்மன் கழகத்தோழர்கள், மற்றும் தோழர்கள், உற்றார் உறவினர், நண்பர்களுடன் நாமும் துயர்பகிர்ந்து கொள்கின்றோம்.
அனைத்து கழகத்தோழர்கள் சார்பாக
த.ம.வி.கழக (புளொட்) சுவிஸ்கிளை
09.11.1915