Header image alt text

இலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும்-வடக்கு முதல்வர்-

vigneswaranஇலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. அதில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் தன்னாட்சி அலகும், தென்னிலங்கையில் மலையக மக்கள் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை முன்மொழிகளை சமர்ப்பித்துள்ளது. இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் நிலையில் அதற்கான முன்மொழிவாக இந்த பிரதான விடயம் இன்று வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டது. இதனைத்தவிர ஒற்றையாட்சிக்கு பதிலாக சமஷ்டி முறை அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பிரஜை ஒருவர் மற்றுமொருவருக்கு கீழானவர் என்ற முறைமை மாற்றப்பட வேண்டும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய ஒரு இனம் மற்றைய இனத்தை விட கூடிய பயனை கோர கூடாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படும். இந்த தன்னாட்சி பிராந்தியத்தின் நிலை பரிமாணம் மற்றும் நியாயாதிக்கம் என்பன தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளால் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படும். மொழி ரீதியிலான தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மாநிலமானது மாநில நாடாளுமன்றம் ஒன்றை கொண்டிருக்கும். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

ec15dbab-8e87-4934-967b-226c23426fa0வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டனைச் சேர்ந்த ஓம் சரவணபாகவ சேவா அறக்கட்டளை நிதியத்தின் அன்பளிப்பின் மூலம் நேற்று பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இவ் நிகழ்வு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பததலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தினால் அவர்களின் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளினை மேம்படுத்துவதற்காக கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனார். இவ் கோரிக்கையினை லண்டனைச் சேர்ந்த ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றமையினையிட்டு ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி இன்று முதற் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 40 பிள்ளைகளுக்கு புத்தக பைகள் மற்றும் அப்பியாச கொப்பிகளை வழங்கியிருந்தனர் இவ் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்றிருந்தது. Read more

அனல் மின் நிலையத் திட்டத்தால் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு-

sampurவாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் செய்யப்பட்டுவந்த விறகு வெட்டுதல், தேன் எடுத்தல், வேட்டையாடுதல், விவசாயம் போன்ற தொழில்கள் இந்த அனல் மின் நிலையம் அமைப்பதினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும்; சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத் திட்டத்தைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதைக் கண்டித்து சந்தோசபுரம், கிறேவற்குழி சிவசக்தி வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பசுமை திருகோணமலை அமைப்பு மற்றும் இலங்கை பழங்குடியினர் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ‘நிலக்கரியை எரித்து எம்மை நோயாளி ஆக்காதே’, ‘எங்களின் விளை நிலங்களை நாசம் ஆக்காதே’, ‘எமது சூழலை பாதிக்கும் அனல் மின் நிலையத்தை ஆரம்பிக்காதே’ உள்ளிட்டவை எழுதப்பட்ட பதாதைகளை பொதுமக்கள் தாங்கியிருந்தனர். ஆர்ப்பாட்ட இறுதியில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரனிடம் பசுமை திருகோணமலை அமைப்பினர் கையளித்துள்ளனர்.

போர்ட் சிட்டி மூலம் இயற்கைக்கு பாதிப்பில்லை-பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன-

port cityகொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்படவுள்ள போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒரு வருடமாக போர்ட் சிட்டி நிர்மாணப்பணிகளை இடைநிறுத்தியமைக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள சீன விஜயத்தில் நட்டஈடு வழங்குவதா அல்லது அதனை முற்றாக தடை செய்வதா என்பது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.. அத்துடன், போர்ட் சிட்டி அமைப்பு மற்றும் அது குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த போர்ட்சிட்டி அமைப்பிற்கு பாரிய அளவில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தாலும் அச்சம் கொள்ளுமளவிற்கு அதனால் எந்த விதமான பாதிப்பும் இல்லை. இந்நிலையிலேயே போர்ட் சிட்டி நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, போர்ட் சிட்டியில் மாடிவீடுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன மேலும் கூறியுள்ளார்.

இலங்கை நல்லிணக்கம் தொடர்பில் அமெரிக்கா ஆராய்வு-

Fசர்வதேச குற்றவியல் நீதிக்கான இராஜாங்க அலுவலகத்தின் அமெரிக்க திணைக்களத்தின் விசேட ஒருங்கிணைப்பாளர் டொட் புச்வேல்ட், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிற்கான இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவி மேலாளர் மன்பிரீட் அனன்டும் இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளனர். அவர்கள் நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் அரசாங்க மற்றும் அரசியல் தலைவர்கள், நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் தலைவர்களையும் சந்தித்து நாட்டின் நல்லிணக்க சூழ்நிலை குறித்து அறிந்து கொண்டுள்ளனர். இலங்கை மக்கள் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களையும், சமாதானம் செழிப்பு மற்றும் நல்லிணக்கம் நிலவுகின்ற எதிர்காலத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த தருணத்தில் இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உதவ முயல்வதாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் கூறியுள்ளார். இலங்கையின் நிலை குறித்து முன்நோக்கி வழங்கக்கூடிய பல்வேறு தரப்பினரின் குரல்களை செவிமடுக்க முடிந்தமை பயனுள்ளதாக அமைந்ததாகவும், தாம் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு காணப்படும் நிலைமை குறித்து அறிந்து கொண்டதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிக்கான இராஜாங்க அலுவலகத்தின் அமெரிக்க திணைக்கள விசேட ஒருங்கிணைப்பாளர் டொட் புச்வேல்ட் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தினம் இன்று-

ertrtrtttrஉலக சுகாதார தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார தினமாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வருடத்தின் சுகாதார தினத்தின் தொனிப் பொருளாக நீரிழிவு நோய்த் தடுப்பு முன்னெடுக்கப்படுகின்றது. நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு, நீரிழிவிலிருந்து தப்புதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியன இந்த வருட சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. உலகம் முழுவதிலும் 422 மில்லியன் பேர் நீரிழிவு தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் மக்கள் தொகையில் 11.5 வீதமானவர்கள் நீரிவினால் அவதியுறுவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக உணவுப் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புலிகளின் தொப்பி கொழும்பில் கண்டுபிடிப்பு-

rttrtபுலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் பணியகம் (கொரியர் சேர்விஸ்) ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த தொப்பி அடங்கிய பொதி நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பொதியிலிருந்து ரின்மீன், ஆடைகள் மற்றும் குறித்த புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதரைக்கு வந்துள்ளது, ஆனால் அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும் இல்லாத காரணத்தினால் நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. குறித்த பொதியில் பதிவு இலக்கங்கள் காணப்படாத காரணத்தினால் அப் பொதியை தலைமை காரியாலய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்வையிட்டுள்ளனர். இதன்போதே குறித்த பொருட்களுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை கண்டு நாரஹேன்பிட்டி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த பொருட்களை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீன தொழிற்கட்சி அமைச்சர் சந்திப்பு-

4565656சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனத் தொழிற்சங்கக் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாவோ அவர்களை அவரது விருந்தினர் இல்லமான டியவோயூடாயில் இன்றையதினம் காலை 11.30 மணிக்குச் சந்தித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடனும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் உள்ள நீண்டகால நட்புறவினை வரவேற்ற சோங் தாவோ, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனை வரவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இரட்டை உறவுகளான அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீனத் தொழிற்சங்கக் கட்சிக்கும் இடையிலான உறவு ஸ்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் ஓய்வுபெறுகிறார்-

illangakoonபொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று அறிவித்துள்ளார்.

இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி, அண்மையில் உருவாகிய பொலிஸ் மா அதிபர்களுள் அனைவருக்கும் முன்மாதிரியாக தனது பதவியின் கௌரவத்தை பாதுகாத்து பணியாற்றிய ஒரு பொலிஸ் மா அதிபராக என்.கே.இலங்ககோன், வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்’ என்று கூறியுள்ளார். சுமார் ஐந்தாண்டு காலம் பொலிஸ் மா அதிபராக அளப்பரிய சேவையாற்றிய இலங்ககோனுக்கு, ஜனாதிபதி இதன்போது வாழ்த்து தெரிவித்து, அவரது சேவையைப் பாராட்டியுள்ளார். இந்நாட்டின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக சேவையாற்றிய என்.கே. இலங்ககோன், எதிர்வரும் 11ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதியை துஷ்பிரயோகம் செய்த இந்திய பொலிஸார்-

abuse (14)தமிழகத்தின் மண்டபம் பிரதேசத்தில் இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பொலிஸாரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த 19 வயது பெண்ணை நால்வர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். தற்போது இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில்

அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரமேஸ்வரி வழக்குப் பதிந்து தப்பி ஓடிய நால்வரையும் தேடி வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஸ்சேவை குறித்த முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுமாறு அறிவிப்பு-

busதமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடல், பற்றுச்சீட்டு பெற்றுக்கொடுக்காமை, உரிய பாதையில் பயணிக்காது குறுக்கு வீதிகளினூடாகப் பயணித்தல் போன்ற குற்றங்களை, பஸ் நடத்துனர்கள் மேற்கொள்வார்களாயின், அவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்யலாம். இதேவேளை, ஊர்களுக்குப் பயணிக்கும் மக்கள், குழுக்களாகச் சேர்ந்து பயணிக்க வேண்டுமாயின், அது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 51 பேருக்கு மரண தண்டனை விதிப்பு-

suicideகடந்தாண்டில் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 51 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மரண தண்டனை தொடர்பான அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயத்தை, அச்சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையின்போது, வேண்டுமென்றே கொலை செய்தமை தவிர்ந்த குற்றங்களுக்காக – உதாரணமாக போதைப்பொருள் குற்றங்கள் – மரண தண்டனை விதிக்கும் நாடுகளுக்கு உதாரணமாக வழங்கப்பட்டுள்ள 12 நாடுகளில், இலங்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது 3 மரண தண்டனைகள், இவ்வாறு போதைப்பொருள் குற்றங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவிக்கிறது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமாரவை மேற்கோள்காட்டி, தற்போது 1,115 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறைகளில் உள்ளதாகவும் அவர்களில் 600 பேர், தங்களுடைய தண்டனைகளுக்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இது தவிர, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தலையிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. Read more

வடக்கில் தற்கொலை அங்கி விவகாரம் இராணுவம் செய்திருந்தால் பாரதூரமானது,அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்-த.சித்தார்த்தன் எம்.பி-

P1360388அர­சாங்கம் நல்­லி­ணக்கம், அர­சியல் தீர்வு என எல்லா விட­யங்­களைப் பற்­றியும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில் வடக்கில் தற்­கொலை அங்கி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டிருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கின. இதனை இரா­ணுவம் செய்­தி­ருக்­கு­மானால் அது பாரதூ­ர­மா­ன விட­ய­மாகும். இவ்­வி­டயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கேள்வி எழுப்­பு­வதை விட அர­சாங்­கமே அக்­கறை காட்ட வேண்டும் என்றும் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த சித்­தார்த்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியா­ழேந்­தி­ரனின் அலு­வ­ல­கத்தில் அவ­ருடன் இணைந்து கட்சி உறுப்­பி­னர்­களைச் சந்­தித்­ததன் பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்போதே இந்தக் கருத்­தினை வெளி­யிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த சித்­தார்த்தன் மேலும் கூறு­கையில், வடக்கில் தற்­கொலை அங்­கிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விடயம் குறித்து இன்­னமும் முழு­மை­யான விசா­ர­ணைகள் முடி­வ­டை­ய­வில்லை. இருந்­தாலும் சிங்­கள ஊட­கங்கள் இதனைப் பிழை­யான வகை­களில் வெளிப்­ப­டுத்தி வரு­கி­ன்றன. இது உண்­மை­யி­லேயே நாட்­டுக்குக் கூடா­த­தொரு விடயம் என்­பது அவர்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை. ஆகவே இதனை நன்­றாக உணர்ந்து கொண்டு செயற்­பட வேண்டும். Read more

மட்டு மாவட்டத்தில் தமிழ் பெண் சாதனை-(படங்கள் இணைப்பு)-

sfdfdfdfdfdமட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி (வயது 19) என்ற பெண் தேசிய கபடி அணிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெண்கள் கபடி அணியில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் பெண் ஆவார். கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர், 12 பேர் கொண்ட கபடி அணியில் 11 சிங்கள பெண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு தமிழ் பெண்ணாக தெரிவாகியுள்ளார். Read more

யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில், புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான பொதுஅறிவுப் போட்டிகள்..! (அறிவித்தல்)-

002bnஎதிர்வரும் 18.04.2016 அன்று “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் “நூலகம்” புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் உள்ள கடைத் தொகுதியில் திறக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனை முன்னிட்டு புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தால், புங்குடுதீவு அனைத்து பாடசாலைகளில் தரம் 1 முதல் 8 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 09.04.2016 சனிக்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் பின்வரும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தரம் 1 அச்சுப்பதித்தல்
தரம் 2 படம் வரைதல்
தரம் 3 ஒட்டுச்சித்திரம்
தரம் 4 சுரண்டல் சித்திரம்
தரம் 5 – 8 பொதுஅறிவுப் போட்டி
Read more

பிரதமர் ரணில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த சந்திப்பு-

ranil mahindaபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இந்தச் சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சென்றிருந்ததுடன்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இருந்துள்ளார். இதேவேளை, இராணுவத்துக்குப் பொறுப்பாக ஜனாதிபதியும் பொலிஸ{க்கு பொறுப்பாக பிரதமரும் இருக்கின்றனர். இந்நிலையில், பாதுகாப்புச் சபை எடுத்த முடிவுக்கு அமையவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமன்றி, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் அகற்றப்படவுள்ளதாக தெரியவருகின்றது. முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை அகற்றிக்கொள்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கே, பாதுகாப்பு கவுன்சில் அங்கிகாரமளித்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். கொழும்பு சொகுசு பஸ்ஸில் முதிரைக் குற்றிகள் கடத்தல்-

fdfdfdfயாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு பஸ்ஸில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் சிறாட்டிக்குளம் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்டபோது பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சாரதி கைதாகியதுடன், வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியுள்ளனர். குறித்த பஸ் தற்போது மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயணிகள் பஸ்ஸின் உட்கட்டமைப்பானது பயணிகள் இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டு மரக்குற்றிகள் கடத்தலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்துள்ளது. குறித்த பஸ்ஸில் இதற்கு முன்னரும் பல தடவைகள் சில உள்ளுர் பொலிசாரின் ஒத்தாசையுடன் நடைபெற்று வந்துள்ளது எனவும், அப்பகுதி மக்கள் இது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டு அவரின் தலைமையில் கீழ் செயற்படும் விசேட குற்றத் தடுப்புப் பிரிவினரே மேற்படி பஸ்ஸினை மரக் குற்றிகளுடன் பிடித்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக யாழ் – கொழும்பு சொகுசு பஸ்களில் கஞ்சா கடத்துவது உள்ளிட்ட பல்வேறு மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிவேக வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் அதிகாரம்-

highwayஅதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்-

7y68787வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கற்கை நெறியைக் கற்று வெளியேறிய மாணவர்கள், தமக்கு அரசாங்க வேலையைப் பெற்றுத்தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தில் மொத்தம் 350பேர் இருப்பதாகவும் தங்களுக்கு நிபந்தனைகள் இல்லாமல் நேரடியாக உள்வாங்கும் படியும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களும் தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு விஜயம்-

ranil wickramaஉத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு செல்கின்றார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட 15பேர் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவ்விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கான சீனாவின் முதலீடுகள் தொடர்பில், இந்த விஜயத்தின்போது விசேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு-

parliamentஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மூன்று அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

லக்ஸ்மன் செனவிரத்ன (ஐ.ம.சு.மு.) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சராகவும்,

பாலித தேவரப்பெரும (ஐ.தே.க) உள்விவகாரம், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார (ஐ.ம.சு.மு) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இலங்கை அரசின் நல்லிணக்கச் செயற்பாடு நத்தை வேகத்தில்-த.சித்தார்த்தன் எம்.பி-
P1360383இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடு மிகவும் நத்தை வேகத்தில் செல்கிறது. அத்துடன் அரசியல் அமைப்பு மாற்றமானது ஒரு கேள்விக்குறியான விடயமாகவே இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 
மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்ததன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார். 
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
நல்லிணக்கச் செயற்பாடுகளில் பல விடயங்களில் பேரினவாதிகள் மிகக் கவனமாகச் சிந்திக்கிறார்கள். போர் நிறைவடைந்தபோது 12ஆயிரம் விடுதலைப் புலிகளை புனர்வாழ்வளிப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ச விடுவித்திருந்தார். இருநூறு வரையானவர்களை, அதுவும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாதவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அதிகமானவர்கள் உதவியவர்களே இருக்கிறார்கள். இவர்களை விடுவிப்பதில் அரசிற்கு பெரும் பிரச்சினையிருக்கிறது. 12ஆயிரம் பேர் செய்யாத புரட்சியை இந்த இருநூறு பேர் செய்யப்போகிறார்களா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகின்றது. அந்த வகையில் பேரினவாதத்துக்குப் பயந்த ஒரு செயற்பாடு, அரசியல்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 

Read more

வீட்டுத் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துமாறு வடக்கு ஆளுனர் பரிந்துரை-

reginold coorayவடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகளின் வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பரிந்துரை விடுத்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த வீட்டுத் திட்டம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் பல்வேறு திருத்தங்களுடன் தொடருங்கள்..” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவரது பரிந்துரைகள் குறித்து விரிவாக கூற மறுத்தபோதும், சில வசதிகள் தொடர்பில் பயனாளிகளால் வழங்கப்பட்டுள்ள யோசனைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இது குறித்து மத்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துமூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளேன். எனது கடமையை நிறைவேற்றியுள்ளேன் என பதிலளித்துள்ளார். இந்த வீட்டுத் திட்டத்தின் பிரகாரம் சமையல் எரிவாயு, சமையல் அடுப்பு, கணனி, தொலைக்காட்சி போன்றவற்றை பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது, மக்கள் இந்த திட்டத்தை விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன் எனவும் ரெஜினோல்ட் குரே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு இராணுவத்துக்கு பதிலாக பொலிஸ் அனுப்பிவைப்பு-

Mahinda Rajapaksa, Daya Ratnayakeமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவக் குழுவை நீக்கி விட்டு அதற்காக பொலிஸாரை அனுப்பி வைத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையளவில், பாதுகாப்புப் பணியில் இருந்த 50 இராணுவத்தினர் இவ்வாறு இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அவர்களுக்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதுகாப்பு சபையினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேர்த்தன தெரிவித்துள்ளார். மேலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்கும் பொலிஸாரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் பாதுகாப்பு படையை குறைக்க எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸாரை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் ருவன் விஜேவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை-

education ministryதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை ஏப்ரல் மாத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், தகுதிபெற்ற 4,700 பேரை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்றிலிருந்து அழைப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன. இந்த மாணவர்கள் நாடு பூராகவுமுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். 2013 ஆம் ஆண்டின் பின்னர், கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதுடன், இதற்கான எதிர்ப்பார்ப்புடன் இருந்த மாணவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை-பொலிஸ் மா அதிபர்-

illangakoonநாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்ள முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாபானபிரேமசிறி மகாநாயக்க தேரரை சந்தித்தப் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் அனைத்து பாதுகாப்பு விடயங்களையும் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.