Header image alt text

பெற்றோர், ஆசிரியர், மாணவர்களின் சமூகமயமாதலே எமது சமூகத்தின் வெற்றி-திரு க.சந்திரகுலசிங்கம்-(படங்கள் இணைப்பு)-

IMG_3532பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடையே சிறந்த தொடர்பு முறை முன்பள்ளி முதல் உயர்தரம் வரை சிறப்பாக இருத்தலின் ஊடாகவே எமது சமூகத்தின் கல்வியில் பாரிய மாற்றத்தை தற்காலத்தில் மேற்கொள்ள முடியும் என வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும், புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வவுனியா அருணோதய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் (16.07.2016) நேற்று உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தின் தேவை கருதி சிறந்த முறையில் ஆசிரிய வளங்களுடன் செயலாற்ற வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. மாணவர்கள் மீது அதிக அக்கறையினை பெற்றோர்களுடன் ஆசிரியர்களும் காட்ட வேண்டும். காலத்தின் போக்கில் மாணவர்களின் எண்ணங்கள் மாற்றமடைவதனால் அவர்களின் செயற்பாடுகள் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு இல்லையெனில் பாதைமாறிப்போகும். Read more

வலி மேற்கில் வீரமக்கள் தினம்-(படங்கள் இணைப்பு)

P1140251வலி மேற்கு பிரதேசத்தில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தொகுதியின் கிளையினால் மேற்கொள்ளப்பட்டது. அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது மேற்படி நினைவுநாள் நிகழ்வானது 13ஆம் திகதியன்று நாள் வலக்கம்பறை பொதுஅரங்கில் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் திருமதி. நாச்சியார். செல்வநாயகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் மா.உதயசூரியன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நோர்வே கிளை அமைப்பாளர் ராஜன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் கௌதமன், மதகுரு அன்ரனி அடிகளார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தோழர் சின்னக்குமார், கழகத்தின் தோழர் கிருஸ்ணன் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் அமரரது படத்திற்கு அஞ்சலி செய்யப்பட்டதுடன். அகவிழக்கும் ஏற்றப்பட்டது. Read more

கறுப்பு ஜூலையில் 27ஆவது வீரமக்கள் தினம்

fdgfgfgfgதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி லண்டன் ஈஸ்ட்காம் நகர மண்டபத்தில் 27ஆவது வீரமக்கள் தினம் எதிர்வரும் ஜூலை 17ம் திகதி ஞாயிறுக்கிழமை மாலை 5 மணி முதல் மாலை 10.00 மணிவரை நடைபெறவுள்ளது. Read more

வீரமக்கள் தின மூன்றாம் நாள் நிகழ்வுகள்-

IMG_3175தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) வருடந்தோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம்திகதி முதல் நாளை 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. வீரமக்கள் தினத்தின் 03ம் நாளான இன்றும் வவுனியா கோவில்குளம், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மௌன அஞ்சலியும், மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. வீரமக்கள் தின இறுதிநாளான நாளை செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்ல வளாகத்தில் மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு-

missingகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஆவணங்களை தயாரிப்பதற்காக சிறிது காலம் ஆணைக்குழுவின் அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பிலான சாட்சி விசாரணைகளின் பின்னர், ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் சுமார் 19,000 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. அவற்றுள் சுமார் 4000 முறைப்பாடுகள் போலியானவை என்பதால், நன்கு ஆராய்ந்த பின்னர் அந்த முறைப்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைப்பு-

medical check upபுலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்களது வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘அண்மைக் காலமாக, புனர்வாழ்வு பெற்றுவந்த போராளிகள், மரணத்தை தழுவி வருகின்றனர். இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருகின்றது. இவற்றை கருத்திற்கொண்டு, முன்னாள் பேராளிகளுக்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் எப்பகுதியில் இருக்கும் முன்னாள் பேராளிகளும், 0777735081, 0773169997 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, இலவச வைத்திய பரிசொதனைக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என்று அவர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் தூதுவருக்கு பிடியாணை-

uthayanka weeratungaரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிடிவிறாந்தை இன்டர்போல் (சர்வதேச) பொலிஸாரின் ஊடாக பிறப்பிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கோரப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், இலங்கை விமானப்படைக்கு மிக்விமானங்களை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும், சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையை அடுத்தே, நிதிமோசடி விசாரணைப்பிரிவு மேற்கண்டவாறு கோரியுள்ளது. இந்த கோரிக்கையை, ஆராய்ந்து பார்த்து எதிர்வரும் 18ஆம் திகதியன்று கட்டளைப்பிறப்பிப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.

யாழில் ஜே.வி.பி.யினர் துண்டுப்பிரசுர விநியோகம்-

jvp (2)‘மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அசாதாரண வரிச்சுமைக்கு எதிராகப் போராடுவோம்’ என்ற தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், இன்று யாழ். நகரப் பகுதிகளில், மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) வநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள, ஜே.வி.பி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, இந்தத் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தார். ‘மஹிந்த அரசைப் போன்று மைத்திரி – விக்கிரமசிங்க கூட்டரசும், வற் சுமையை மக்கள் மீது திணிக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரங்களில், ‘மோசடி வற்’, ‘மக்களுக்கு வேண்டாம், மோசடிகாரர்களிடம் இருந்து பணத்தை அறவிடு’, ‘வயிற்றுப் பிழைப்புக்காக அறவிடும் வரியை உடனடியாக இரத்துச் செய்’, ‘அரசாங்கத்தின் வீண் விரயச் செலவுகளை நிறுத்து’, ‘மக்கள்மீது சுமத்தப்படும் வரியை உடனடியாக நீக்கு’ போன்ற வாசகங்கள், குறித்த துண்டுபிரசுரத்தில் பொறிக்கபட்டிருந்தன.

கொத்தணிக் குண்டுகளை படையினர் பயன்படுத்த இல்லை-அமைச்சர் சரத் பொன்சேகா-

fonsekaபோரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டர் என்றும் போரின்போது படையினர் ஒருபோதும் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை எனவும் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “இந்த விசாரணைகள் அனைத்தும் உள்ளுர் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும். வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் இடமளிக்கவில்லை. இந்த விசாரணைகள் அனைத்துலக கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். இதனால், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையை இந்த விசாரணைகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஜனாதிபதியும், பிரதமரும், கருதுகின்றனர். இந்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கு, முன்னைய அரசாங்கம் கூட முடிவு செய்திருந்தது. அதேவேளை, போரின்போது படையினர் ஒருபோதும் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. இராணுவத்தின் அனுமதி மற்றும் கோரிக்கையின் பேரில் மட்டும் தான், விமானப்படை இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்தும். ஆனால் இராணுவம் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துமாறு விமானப்படையிடம் கோரிக்கை விடுக்கவில்லை. அதைவிட, கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு சில சிறப்பான வசதிகள் தேவைப்படும். விமானப்படையிடம் அத்தகைய வசதிகள் இல்லை” என கூறியுள்ளார்.

மாணவன் மரணம் குறித்து மனித உரிமைக்குழுவில் முறைப்பாடு-

complaintயாழ்ப்பாணம் அராலி பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சடலமாக மீட்க்கப்பட்ட மாணவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மாணவனது உறவினர்களால் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 
கடந்த மே 24ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த 16 வயதுடைய ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும் மாணவன் அராலி தெற்கு மாவத்தை பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டிருந்த வட்டுக்கோட்டை பொலிஸார், மாணவனது குடும்பத்திற்கும் பிறிதொரு குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். எனினும் மாணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லையெனவும், அவரது மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக யாழ் மாவட்ட மனிதவுரிமை ஆணையாளர் கருத்து தெரிவிக்கையில், உறவினர்களால் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தை விசாரணை செய்த வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து விசாரனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியிடமும், சம்பவம் தொடர்பான பரிசோதனை அறிக்கையை கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற நீதிமன்ற விடயம் இலங்கையே தீர்மானிக்கவேண்டும்.அமெரிக்கா-

Tom-Malinowski-300x200 (1)போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் இணைந்து இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில் நேற்றிரவு கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரொம் மாலினோவ்ஸ்கி, “ஜெனிவா தீர்மானம் இலங்கையின் இறைமையை முழுமையாக மதிக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம். தமது இறைமைக்குட்பட்ட வரையறைக்குள் இருந்து கொண்டே, பல்வேறு மட்டங்களில் அனைத்துலக பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கை வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறது. Read more

பிரான்ஸின் நீஸ் நகர தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு-(படங்கள் இணைப்பு)

asdsபிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறுமாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார். மேலும், 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை “பயங்கரவாதத் தாக்குதல்” என வர்ணித்துள்ளார். “ப்ரோமனேட் தேஸாங்கிலே” என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. லாரியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் வெளியிட்டுள்ள அறிக்கை-

K.Sivanesan Bavanபொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் சம்பந்தமாக காணப்பட்ட இழுபறி ஒரு இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் “பேய்கள் உலாவும் இடத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கமுடியாது” என கிராமிய பெருளாதார அபிவிருத்தி அமைச்சர் கூறி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதும் அருவருக்கத்தக்கதுமான ஓர் விடயமாகும்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் உத்தரவுக்கமைய, பெரும்பாலான விவசாய பிரதிநிதிகள், விவசாய அமைப்புகள், துறைசார்ந்த நிபுணர்கள், பொதுமக்கள், மாவட்ட அபிவிருத்தியின் நலன் விரும்பிகள் போன்றவர்களின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கை சேர்ந்த பெரும்பான்மையான மாகாணசபை உறுப்பினர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இனம் காணப்பட்டுள்ள ஒமந்தை பற்றிய அமைச்சரின் கூற்று அவரது பேரினவாத மனநிலையை தெளிவாக காட்டுகின்றது. Read more

யாழ் உட்பட எட்டு பல்கலைக்கழகங்களுக்கு தொழில்நுட்ப பீடம்-

jaffna campusயாழ்ப்பாணம் உள்ளிட்ட எட்டு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொழில்நுட்ப பீடங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதி 5 வீதத்தால் அதிகரிக்கின்றது. இந்நிலையில், பட்டப்படிப்பை தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான வசதிகளை செய்துகொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம், தென்கிழக்கு, களனி, கொழும்பு, பேராதனை, ஊவா வெல்லஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென இவ்வருடத்தில் 1,369 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கொண்டு தொழில்நுட்ப பீடங்களை ஆரம்பிப்பதற்கும், 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு தேவையான நிதியினை திறைசேரியிலிருந்து ஒதுக்கிகொள்வதற்கும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்லவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

வீட்டுக் கிணற்றில் 06 கைக்குண்டுகள் இனங்காணப்பட்டன-

ewrereயாழ். பொம்மைவெளி பகுதியில் 6 கைக்குண்டுகள் இணங்காணப்பட்டுள்ளதாகவும், குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதி வீடொன்றில் கிணற்றை வீட்டு உரிமையாளர் இன்று துப்பரவு செய்துள்ளார்.

இதன்போது கிணற்றில் 6 கைக்குண்டுகள் இருப்பதைக் கண்டு உடன் யாழ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோது பொலிஸார் அங்கு சென்று கைக்குண்டுகளை பார்வையிட்டுள்ளனர். அதில் 03 பழைய குண்டுகள் மற்றும் 03 புதிய குண்டுகள் இருப்பதாகவும், அக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வர் கொலை, விசாரணைகள் நிறைவு-

rtrtrபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவுசெய்யப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணை இடம்பெற்றது. எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. இதன்போது பிரதிவாதியான துமிந்த சில்வா, சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல நீதிபதிகளின் அனுமதியைக் கோரியிருந்தார். அதற்கான விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால், அந்த வேண்டுகோளை நிராகரிப்பதாக நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 8ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதுடன், அனைத்து பிரதிவாதிகள் மற்றும் மனுதாரர்கள் சார்பாக எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்க முடியுமென மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

உறவுகளை நினைத்து உணர்வுடன் 27வது வீர மக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பம்.! (படங்கள் இணைப்பு)

zபுளொட் அமைப்பின் 27வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று 13.06.2016 காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நினைவில்லத்தில் உள்ள கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த அதிதிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களதும், கழகத்தின் மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களதும் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவித்தனர். அத்துடன் நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இறைபணிச் செம்மல் செ.வை.தேவராசா(கண்ணகி), சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு நா.சேனாதிராசா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு கு.ரவீந்திரநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு த.யோகராஜா, மற்றும் செயற்குழு உறுப்பினர்களான திரு. குகதாசன், திரு சு.காண்டீபன், மாவட்ட செயற்குழு நிதி பொறுப்பாளர் நிசாந்தன், மாவட்ட குழு உறுப்பினர்களான ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, மூர்த்தி ஆகியோருடன் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். Read more

சுவிஸில் 10 யூலை 2016 நடைபெற்ற வீரமக்கள் தினம் (படங்கள் இணைப்பு)

DSC02034புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில், கழகதோழர்கள், ஆதரவாளர்கள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பெரியோர்கள், குழந்தைகளென பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கை தோழர்கள் மனோ, சித்தா, கைலாசநாதன் (குழந்தை), ஜெர்மன் கிளைத் தோழர் யூட், திருமதி.சுகந்தினி இரதீஸ்வரன் (தீபன்), திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திரு.இரத்தினகுமார் ஆகியோர் ஏற்றிவைக்க, இதனைத் தொடர்ந்து மரணித்த அனைத்து அமைப்புக்களின் தலைவர்கள், போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் மலரஞ்சலி செய்யப்பட்டது. Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இருதய சத்திர சிகிச்சைக்கான நிதி அன்பளிப்பு-

dfdfdநேற்று (12.07.2016) செவ்வாய்க்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக யாழ். உடுவிலைச் சேர்ந்த பரமனாதன் இராணி என்பவரின் இருதய சத்திர சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த துஸ்சியந்தன் அவர்களால் 25,000 ரூபாவும் லண்டன் நாட்டை சேர்ந்த லோகஞானம் அவர்களால் 10,000 ரூபாவும் சுழிபுரத்தை சேர்ந்த பாலா என்பவரினால் 5,000 ரூபாவுமாக சத்திர சிகிச்சைக்காக ரூபா 40,000 வங்கியில் வைப்பிலிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கி வைக்கபட்டுள்ளது. மேற்படி விண்ணப்பமானது அவரது மகள் ப.ரேகா என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடந்த 24.06.2016 அன்று முன்வைக்கபட்டது. அவர் தெரிவிக்கையில் 1990ம் ஆண்டு தாங்கள் தையிட்டி காங்கேசன்துறை மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து உடுவில் தெற்கு புதுமடம் மானிப்பாயில் வசிக்கின்றோம். 2 பெண் பிள்ளைகளை சுமையாக தாங்கி வயதான தந்தையுடன் வாழ்கின்றோம். தற்போது எனது தாயாருக்கு இதயத்தில் 4அடைப்புகள் இருப்பது கண்டுபடிக்கபட்டுள்ளது. நாங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை கூட பூர்த்திசெய்ய முடியாத வறுமைக்கோட்டின் கிழ் வாழ்ந்து வருகின்றோம். லங்கா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு ரூபா 800,000 தேவையாக உள்ளது. Read more