Header image alt text

மருத்துவ மற்றும் சித்த பீடங்கள் நாளை ஆரம்பம்-

jaffna university managementயாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்காக விரிவுரைகள் நாளை 20ஆம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளதோடு, விவசாய பீடத்தின் பரீட்சைகளும் இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி சிங்கள மற்றும் தமிழ் மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, துணைவேந்தர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், மோதல் சம்பவம் அனைவரையும் மனவருத்ததுக்கு உட்படுத்தியுள்ளது. சம்பவம் ஏற்பட்டு ஒரு மணிநேரத்துக்குள் நிலைமை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தும் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தபட்டிருந்தன. இது மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற ஒரு மோதல் ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து மூவின மாணவர்களும் பாதுகாப்புடனும் எவ்வித பிரச்சினையும் இன்றி கல்விச் செயற்பாட்டை தொடர்ந்து வருகின்றனர்.
Read more

தனியார் கல்வி நிலையங்களில் சிறுவர் பாதுகாப்பு கலந்துரையாடல்-

ddfdfdகிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஹம்சநாதன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கரைச்சி பிரதேச தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, கல்வி நிலைய கட்டடங்களை உரிய முறையில் அமைத்தல், குடிநீர் வசதி மற்றும் மலசலகூடங்களை மாணவர் தொகைக்கமைய அமைத்தல், மாலை நேர வகுப்புக்களை மாலை 6 மணிக்கு முன்பாக நிறைவுக்கு கொண்டுவருதல், இரவு நேர வகுப்புக்களை தவிர்த்தல், குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் விசேட வகுப்புகளை நடாத்துவதை தவிர்த்தல், மாணவர்களின் உடல், உள நலங்களை அறிந்து செயற்படுதல், சிறுவர் துஷ்பிரயோகத்தை தவிர்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன. Read more

பாடசாலை சென்ற மாணவியைக் காணவில்லை-

missingமட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 16வயது மாணவி நேற்று வழமை போன்று பாடசாலைக்கு சென்றுள்ளார். குறித்த மாணவி இதுவரை வீடு வந்து சேரவில்லையென குறித்த மாணவியின் பெற்றார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளளனர். குறித்த மாணவியுடன் கல்வி கற்கும் சக வகுப்பு மாணவிகள் பாடசாலை முடிந்து வீடு வந்து சேர்ந்த போதிலும் மேற்படி மாணவி இதுவரை வீடு வந்து சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி மாணவி பாடசாலை சீருடையுடன் வீட்டை விட்டு பாடசாலைக்கு செல்வதாக கூறி சென்றபோதிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு செல்லவில்லையெனவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

வவுனியாவில் சுவாமி விபுலானந்தா அடிகளாரின் 69வது சிரார்த்த தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-
dsdsசுவாமி விபுலானந்தா அடிகளாரின் 69ஆவது சிரார்த்த தின நிகழ்வு இன்று (1907.2016) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றுள்ளது. வவுனியா தனியார் பேரூந்து தரிப்பிடத்திலுள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் மேற்படி நிகழ்வினை வவுனியா தமிழ்மா மன்றம், நகர வரியிறுப்பாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் அன்னாரின் சிலையினை நிறுவிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வை. பாலச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான  ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன் மற்றும் தமிழ் மாமன்றத் தலைவர் கிருபானந்தகுமார், வைத்தியர் மதுகரன், கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் தமிழ் விருட்ச சமூக ஆர்வலருமான சந்திரகுமார்(கண்ணன்) வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, அயல் பாடசாலை அதிபர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்த கொண்டிருந்தனர்.  Read more

ஏழாலை தமிழ் பொதுப்பணிமன்ற தையல்பயிற்சியும், கண்காட்சியும்-

IMG_9259செரண்டிப் சிறுவர் இல்லத்தினரால் ஏழாலை தெற்கு தமிழ்ப் பொதுப்பணிமன்ற சனசமூக நிலையத்தில் நடாத்தப்பட்ட 04ஆவது அணியின் தையல் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த 15.07.2016 வெள்ளிக்கிழமை அன்று செரண்டிப் இல்லத்தின் தலைவர் திரு. அ.கந்தசாமி அவர்களது தலைமையில் நிலையத்தின் முன்றலில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வலி.தெற்கு பிரதேசசபை உறுப்பினர் நா.லட்சுமிகாந்தன், சனசமூக நிலையத் தலைவர் சுஜாதரன், ஏழாலை தெற்கு சிலோன் மிசன் போதகர் மைனசீலன், சூராவத்தை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாக சபைத்தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் பயிற்சி பெற்ற மாணவியரின் கைப்பணிப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், மாணவியருக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்விலே மாணவியர், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

வட்டுக்கோட்டையில் நடைபெற்ற வீரமக்கள் தின நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
P1140295புளொட் அமைப்பு வருடந்தோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தினுயை 03ம் நாள் நிகழ்வாக யாழ். வட்டுக்கோட்டையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்;வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அங்கத்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது.  

Read more

கிளிநொச்சி அறிவியல் நகரில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் அங்குராப்பணம்-

18-7-2016 15.7.49 4இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகரில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காணியிலேயே இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் இன்றுகாலை 10மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இதற்கான நிர்மாணப்பணிகள், சாதனங்கள் வழங்கல், இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றுக்காக ஜேர்மன் அபிவிருத்தி வங்கியினால் 8.4 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்ட ஒரு தொழிற்பயிற்சி நிறுவனமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திறன்விருத்தி மற்றும் தொழிற்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இந்திய உயர்ஸ்தானிகர் நடராஜன், பாராளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், மஸ்தான், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் தசைநார் பயிற்சி இயந்திரம் அன்பளிப்பு-

asdads
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரினால் வட்டு இந்துக் கல்லூரி விசேட தேவைக்குரிய மாணவர்களின் அலகுக்கு ரூபா 16,250 பெறுமதியான தசைநார் பயிற்சி இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பமானது வட்டு இந்து கல்லூரி அதிபரினால் எமது சங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ் இயந்திரம் கல்லூரியில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிhர் சங்க தலைவர் கு.பகீதரனால் வழங்கி வைக்கபட்டுள்ளதுடன் ஏற்கனவே இப் பாடசாலையின் விசேட தேவைக்குரிய மாணவர்களுக்கு எம்மால் தையல் இயந்திரம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.
இவ் விசேட தேவைக்குரிய மாணவர்களுக்கு உற்ச்சாகத்தை ஊக்குவித்து அவர்களின் பிறப்பிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து இவர்களும் ஏனைய மாணவர்கள்போல் சமூகத்தில் வாழ வைப்பதே எங்களின் அவா. இவ் கைங்கரியத்தை செய்ய முன்வந்த லண்டனைச் சேர்ந்த அ.கிருபாகரன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரும் பாடசாலை சமூகமும் நன்றிகள் தெரிவிக்கிறோம். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)-

பத்திரிகை அறிக்கை-

K.Sivanesan Bavanமுல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி நடாத்த முற்படுகின்ற சாத்வீகப் போராட்டத்தினை கைவிடத் தூண்டும் முயற்சிகள் தமிழ் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கசியும் செய்திகள் குறித்து நாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் யாராகிலும், தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்கு அவர்களுக்குள்ள உரிமைகளை மறுக்க அல்லது பலவீனப்படுத்த அல்லது அதன் நோக்கங்களை திசைதிருப்ப எவருக்கும் உரிமை கிடையாது. காலத்துக்குக் காலம் அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழ் அரசியல் தலைமைகளாலும், அரச மற்றும் படைத்தரப்பு அதிகாரிகளாலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அவை கைவிடப்படுகின்ற நீண்ட அனுபவத்தை கொண்டவர்கள் கேப்பாபிலவு கிராம மக்கள். Read more

வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 27 வது வீரமக்கள் தினம்.! (படங்கள் இணைப்பு)-

2b89e6b0-1eb2-4102-ad3b-dd4966f98fb7புளொட் அமைப்பினால் வருடாந்தம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வீர மக்கள் தின நிகழ்வுகளின் இறுதி நிகழ்வு 16.07.2016 சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இடம்பெற்றது. புளொட் அமைப்பின் கௌரவ தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ச்சியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக செயலாளர் தோழர் எம்.பற்றிக் அவர்களின் நெறிப்படுத்தலில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை அடுத்து கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் திரு சு.சதானந்தன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் திரு க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், ஓய்வுபெற்ற அதிபர் திரு.சிவசோதி, கழகத்தின் உப தலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கழகத்தின் உப தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ராகவன், தேசிய அமைப்பாளர் த.யோகராஜா, கழக பொருளாளர் இளங்கோ, முன்னாள் சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் அன்ரன் பொன்னையா, மகளிர் அணியைச் சேர்ந்த தோழர் ஜெஸ்மின், செயற்குழு உறுப்பினர்களான செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் தோழர் குகதாசன், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (சிவம்), Read more

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வலி மேற்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-

P1140273தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் 27 ஆவது வீரமக்கள்; தினம் கடந்த 13.07.2016 அன்று முதல் 16.07.2016 வரையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வீரமக்கள் தினத்தின் இரண்டாம் நாள் நிகழ்வானது வலி மேற்குப் பிரதேசத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டைக் கிளையினால் பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு நினைவுகூரப்பட்டது. இவ் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டதுடன் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தார். இவ் நிகழ்வில் கழகத்தின் நோர்வே கிளையின் அமைப்பாளர் திரு.ராஜன், கழகத்தின் வட்டுக்கோட்டை உறுப்பினர் தோழர் சின்னக்குமார் மற்றும் பல தோழர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். Read more

மக்களை நேசித்து மரணத்தை தழுவிக்கொண்ட முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் வசந்தன் அவர்களுக்கு அஞ்சலி-(படங்கள் இணைப்பு)-

IMG_333927வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமீழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த உறுப்பினருமான தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) அவர்களுக்கு வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில் மறைந்த 18ஆவது நினைவு தினமான 15.07.2016 அன்று அவர்களை நினைவுகூரும் முகமாக விளக்கேற்றி, மலர்மாலைகள் அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவருடன் மறைந்த அவரது புதல்வர் ச.வக்சலன் அவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்விலே தோழர் வசந்தனின் அன்புத் தாயார், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், ஈரோஸ் அமைப்பின் தலைவரும், தோழர் வசந்தனின் சகோதரருமான திரு. ச.துஸ்யந்தன், Read more