Header image alt text

கறுப்பு யூலையின் 33ம் ஆண்டு நினைவுதினம்-

dsfdfdfdகறுப்பு யூலையின் 33ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை மாதம் 23ம் திகதியாகிய இன்றையதினம் முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. 1983 ஜூலை 23ம் திகதி யாழ். திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்களின் கெரில்லாத் தாக்குதலில் 13படையினர் பலியானதைத் தொடர்ந்து தமிழ் மக்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொண்டனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும், இன்னும் பல்வேறு நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டான் பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு-

landமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 74 குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள்இ ன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்போது, பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 43 பேருக்கு தலா 01 ஏக்கர் மேட்டுக்காணிக்கான அனுமதிப்பத்திரமும், 29 பேருக்கு தலா அரை ஏக்கர் காணிக்கான அனுமதிப்பத்திரமும், 02 பேருக்கு தலா 01 ஏக்கர் வயல் காணிக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கட்டமாக அனுமதிப்பத்திரம் வழங்கவுள்ளவர்களுக்கான காணிக் கச்சேரியும் இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், பனிக்கன்குளம் கிராம அலுவலர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மலேசியாவில் நினைவுகூரப்பட்ட 27ஆவது வீரமக்கள் தினம்-

fwerereபுளொட்டின் 27ஆவது வீரமக்கள் தினம் மலேசியா டமாங்கிறா டமாய் என்னும் பகுதியில் கடந்த 15.07.2016 வெள்ளிக்கிழமை தோழர் ரியாந்தன் அவர்களின் தலைமையில் நினைவுகூரப்பட்டது.

இதன்போது வீரமக்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன.

இந்நினைவுதின நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.           மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினுடாக யாழ் இந்துக்கல்லூரி அவுஸ்ரேலியா பழைய மாணவர் சங்கம் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

B3முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலய மாணவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் மூன்றாம் கட்டமாக கற்றல் உபகரணங்கள் பாடசாலை சீருடைத்துணிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். துணுக்காய் கல்வியத்திற்குட்பட்ட பாடசாலைகளான புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை மாங்குளம் மாகாவித்தியாலயம் பாண்டியன் குளம் மாகாவித்தியாலயம் சிறாட்டிகுளம் அ.த.க பாடசாலை கல்விளான் அ.த.க பாடசாலை மற்றும் உயிலங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு 125 புத்தக பைகள் 23 மாணவர்களுக்கான சீருடைத்துணிகள் மற்றும் 7 துவிச்சக்கர வண்டிகள் என்பன யாழ் இந்துக்கல்லூரி ஆவுஸ்ரேலியா பழைய மாணவர்கள் சங்கத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. Read more

நான்கு வெளிநாட்டு தூதுவர்கள் நியமன கடிதங்கள் சமர்ப்பிப்பு-

wrtererஇலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமது நியமன கடிதங்களை வழங்கியுள்ளனர். மெக்ஸிக்கோ, போர்த்துக்கல், கிரீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல் போன்றே அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தற்போதைய அரசின் கொள்கை என்று ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இலங்கைக்கு வழங்க முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வெளிநாட்டு தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

சங்குப்பிட்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு-

sfdகிளிநொச்சி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், பொலிஸார் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றதற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை எனவும் இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலையாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்ட பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரவேலு கபில்ராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளாகிய பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

லண்டனில் கறுப்பு ஜூலையில் 27ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-(படங்கள் முழுமையாக இணைப்பு)-

13702344_1774076416170694_1011690158_oதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி லண்டனின் New ham Town Hall, Barking Road, Eastham,  London, E6 2RP என்ற முகவரியில் அமைந்துள்ள ஈஸ்ட்காம் நகர மண்டபத்தில் 27ஆவது வீரமக்கள் தினம் கடந்த (17.07.2016) ஞாயிறுக்கிழமை மாலை 5.10 மணியளவில் லண்டன் தோழர் நடாமோகன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. நிகழ்வின் தலைமையுரையினை லண்டன் ஈஸ்த்ஹாம் உப நகரபிதா போல் சத்தியநேசன் அவர்கள் நிகழ்த்தினார். “ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை” என்ற வாசகத்தை முன்நிறுத்தி மறைந்த அனைத்து இயக்க போராளிகளையும் வணங்கி “கறுப்பு ஜூலையில்” வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு நினைவுகூரப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச் சுடரினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ் அவர்கள் ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மௌன அஞ்சலி இடம்பெற்றது. Read more

தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்-

faiser mustafaஅடுத்த வருட தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுமென, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அமைச்சில் அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். எல்லை மீள்நிர்ணய நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில், தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில, விரைவில் குறித்த நடவடிக்கை பூர்த்திசெய்யப்பட்டு, தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, இரண்டு, மூன்று மாடிகளை கட்டுவதற்கு அனுமதியை பெற்றுவிட்டு, அதற்கு அதிகமான மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள் அமைப்பவர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.   …மேலும் செய்திகளை வாசிக்க……
Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். சிவசிதம்பரம் அவர்களது 93ஆவது பிறந்ததினம்-(படங்கள் இணைப்பு)-

 P1380406முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். சிவசிதம்பரம் அவர்களது 93ஆவது பிறந்ததினம் நேற்று (19.07.2016) கரவெட்டி அபிவிருத்திச் சங்கத் தலைவர் உபாலி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நினைவுப் பேருரை நிகழத்தினார். பேராசிரியர் சிவலிங்கராஜா, முன்னைநாள் மாவட்ட நீதிபதி விக்னராஜா மற்றும் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் நினைவுரைகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். இதில் பெருந்தொகையான மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள அமரர் சிவசிதம்பரம் அவர்களின் உருவச்சிலைக்கு மாலையிடப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு வந்துதும் நினைவுக்கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது.
Read more

வட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற 27ஆவது வீரமக்கள் தினம்-(படங்கள் இணைப்பு)-

P1140355யாழ். வட்டுக்கோட்டை வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய பொது அரங்கில் 27ஆவது வீரமக்கள் தினம் திரு.வி.துரைசிங்கம் அவர்களது தலைமையில் 16.07.2016 சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. வணக்கத்துக்குரிய அன்டனி அடிகளாரின் ஆசியுரையுடன் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் துணைத்தலைவர் சி.க. சிற்றம்பலம், புளொட்டின் நோர்வே கிளையின் அமைப்பாளர் ராஜன், முன்னாள் மானிப்பாய் பிரதேச சபைத் உறுப்பினர் கௌரிகாந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் இறுதியில் சுழிபுரம் பகுதியிலுள்ள கல்விளான் காந்திஜீ சனசமூக நிலைய முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து சுழிபுரம் பெரியபுலோ விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள், துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

A2எமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனது பெற்றோரின் 29வது வருட திருமண நாள் நிறைவை முன்னிட்டு இவ் அன்பளிப்புக்கான 56,300 நிதி அனுசரணையினை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்திற்கு உலருணவுப் பொருட்களும் வள்ளுவபுரம் மாணவி ஒருவருக்கு புதிய துவிச்சக்கர வண்டி மற்றும் பாரதி இல்ல பிள்ளைகளுக்கு சிறப்பு மதிய உணவினையும் வழங்கியுள்ளார். Read more

தீர்வு பற்றி கலந்துரையாடாது சிலர் குழப்புவதற்கு வழி தேடுகின்றனர்-ஆளுநர்-

reginold coorayயாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடாமல் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள சில இனவாதிகள் அதனை மேலும் குழப்புவது எவ்வாறு என ஆராய்வதாக, வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நல்லிணக்க கொள்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வடுக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சூழலை வடக்கு மற்றும் தெற்கிலுள்ள இனவாதிகள் பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், சட்டம் மற்றும் அமைதிக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட நாட்டுக்குள் இருக்க முடியாது என்றார்.

உள்ளக விசாரணையை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்காது-சுரேஸ் பிரேமச்சந்திரன்-

sureshஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்ளக விசாரணை தான் நடத்தப்படும் என்றால், அதனை ஒரு போதும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளாது என, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘உள்ளக விசாரணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. இராணுவத்தினருக்கு எதிராக செயற்படமாட்டோம், இராணுவத்தினை தண்டிக்கமாட்டோம் எனக்கூறும் இந்த அரசாங்கம், எதற்காக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்? ‘என்று கேள்வி எழுப்பினார். ‘சர்வதேச நீதிபதிகள், சர்வதேச சட்டத்தரணிகளின் பங்களிப்பு இல்லாத எந்த விசாரணையும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மாட்டாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகிய நாம், எமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம். மற்றைய பங்காளிக் கட்சிகள், தமது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று அவர் கோரியுள்ளார்.

மாவிலங்குதுறையில் த.வி.பு இலக்கத்தகடு, கைக்குண்டு, பழுதான சயனைட் மீட்பு-

werwerமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, கைக்குண்டு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை மற்றும் பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி போன்றவற்றை நேற்று மாலை மீட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் சுற்றுவேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், அங்கு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த கைக்குண்டு மற்றும் சயனைட் குப்பி மற்றும் த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு பழுதடைந்த நிலையிலான அடையாள அட்டை என்பவற்றை மீட்டதுடன், கைக்குண்டு செயலிழக்கச்; செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்குப் பிணை-

uni-student-thisitharanயாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி.சிசிதரனை, தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று அனுமதியளித்துள்ளார். அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார். மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவர் ஒன்றியத் தலைவரை செவ்வாய்க்கிழமை (19) கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர். இந்நிலையில் மாணவன் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகிய மாணவன், பிணை விண்ணப்பம் செய்தார். மாணவர் ஒன்றியத் தலைவரால் தாக்கப்பட்ட மாணவன் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், இவருக்குப் பிணை வழங்கக்கூடாது என பொலிஸார் மன்றில் கூறினர். எனினும், மாணவர் ஒன்றியத் தலைவர் எந்தவிதமான தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடவில்லையென சட்டத்தரணி கூறியதையடுத்து, நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது-பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்-

D.Sithadthan M.P,.தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்’ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது. ஏனென்றால், ஆரம்பத்தில் அகிம்சை என்ற தடத்தில் சென்றோம். பின்னர் ஆயுதப்போராட்டம் என்ற நிலையில் சென்றோம். தற்போது ஜனநாயகம், அகிம்சை என்ற தடத்திற்கு வந்திருக்கின்றோம். ஆனால் நிச்சயமாக தமிழ்த்தேசியம் என்பது அறுபது வருடங்களாக தாய் குழந்தைக்கு பாலூட்டுவது போன்று எம் அனைவருக்கும் ஊட்டி வளர்க்கப்பட்ட விடயம். அது மாத்திரமன்றி தேசிய உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தானாக உருவாகின்ற உணர்வாகும். ஆகவே அது தடுமாறுவதற்கு மக்கள் விடமாட்டார்கள். நாமும் நிச்சயமாக தடுமாற மாட்டோம். Read more