லண்டனில் கறுப்பு ஜூலையில் 27ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-(படங்கள் முழுமையாக இணைப்பு)-

13702344_1774076416170694_1011690158_oதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி லண்டனின் New ham Town Hall, Barking Road, Eastham,  London, E6 2RP என்ற முகவரியில் அமைந்துள்ள ஈஸ்ட்காம் நகர மண்டபத்தில் 27ஆவது வீரமக்கள் தினம் கடந்த (17.07.2016) ஞாயிறுக்கிழமை மாலை 5.10 மணியளவில் லண்டன் தோழர் நடாமோகன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. நிகழ்வின் தலைமையுரையினை லண்டன் ஈஸ்த்ஹாம் உப நகரபிதா போல் சத்தியநேசன் அவர்கள் நிகழ்த்தினார். “ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை” என்ற வாசகத்தை முன்நிறுத்தி மறைந்த அனைத்து இயக்க போராளிகளையும் வணங்கி “கறுப்பு ஜூலையில்” வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு நினைவுகூரப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச் சுடரினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ் அவர்கள் ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மௌன அஞ்சலி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இசைநடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஈரோஸ் அமைப்பின் சார்பில் வசந்தி, ஆரம்பகால போராளி சத்தியசீலன், கூட்டணியின் பகீரதன் அமிர்தலிங்கம், ரெலோவின் பாவை அருள்ராஜா, கழகத்தின் சார்பில் தோழர் கேசவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் திவாகர், முஸ்லிம் மக்கள் சார்பில் மதிப்பிற்குரிய லெப்பை ஆகியோர் நினைவுச் சுடரினை ஏற்றிவைத்தார்கள். இதனையடுத்து கலந்துகொண்டிருந்த அனைவராலும் மலர்கள் தூவி, நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நடனநாட்டிய நிகழ்வுகளில் பங்கேற்ற பிள்ளைகளும் அவற்றை நெறிப்படுத்திய ஆசிரியர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

13692178_1774077542837248_257919120_o 13692204_1774076182837384_1075683157_o 13692213_1774076259504043_1193402768_o 13692215_1774076312837371_892400543_o 13692337_1774076479504021_409511965_o 13692369_1774076452837357_481068104_o 13694030_1774076159504053_1384110398_o 13694115_1774075029504166_224409590_o 13694118_1774078472837155_303102561_o 13694142_1774076552837347_1765987819_o 13694226_1772907729620896_1759412746_o 13694247_1774076909503978_1253094986_o 13694307_1774076389504030_1163312257_o 13694319_1774076212837381_2082240688_o 13699318_1774076679504001_901293424_o 13699345_1774076576170678_1555766825_o 13699385_1774075202837482_508746656_o 13699463_1774078382837164_434162017_o 13699478_1774076359504033_939842345_o 13699565_1774078092837193_1939113568_o 13702284_1774076616170674_664152791_o 13702284_1774076999503969_648248484_o 13702344_1774076416170694_1011690158_o 13702391_1774078019503867_525614018_o 13709589_1774076276170708_1029904500_o 13709646_1774078206170515_2070669452_o 13709670_1774077866170549_2117635505_o 13709694_1774076096170726_1309929646_o 13711586_1774077519503917_353925847_o 13711604_1774076766170659_805243131_o 13711646_1774078292837173_883062058_o 13711648_1774077049503964_1417562717_o 13711650_1774076226170713_248352870_o 13711737_1774076126170723_289527663_o 13718114_1774078339503835_208486871_o 13720442_1774076512837351_66358330_o 13720485_1774074822837520_504402477_o 13720503_1774076169504052_273220014_o 13720534_1774077432837259_1669968068_o 13720563_1774077729503896_1825234392_o 13720678_1774076896170646_1175295533_o 13720696_1774077962837206_1814329596_o (1) 13728416_1774076649504004_529411112_o 13728498_1774078269503842_2123072141_o 13728498_1774078406170495_229700764_o 13730735_1774076349504034_889746818_o 13730475_1774078166170519_1872537056_o 13730718_1774078249503844_1817796936_o13820655_1774075429504126_853944962_n 13817211_1774075299504139_1104607975_n13819361_1774075472837455_1088507028_n13819399_1774076056170730_216885073_n13819826_1774075652837437_471395433_n 13820376_1774075852837417_261197282_n