Posted by plotenewseditor on 12 July 2016
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 11 July 2016
Posted in செய்திகள்
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி தொடர்கின்றது.
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 July 2016
Posted in செய்திகள்
பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எதிரும் புதிருமான ஆர்ப்பாட்டங்கள்
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விடயத்தில் தொடர்பாக, எதிரும் புதிருமான ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவில் நடைபெற்றுள்ளன.
இதனால், பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் இணக்கம் காண முடியாத நிலையில், இரு கூராகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். Read more
Posted by plotenewseditor on 11 July 2016
Posted in செய்திகள்
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு
வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை புறநகர்ப்பகுதியாகிய தாண்டிக்குளத்திலா அல்லது நகருக்கு வெளியே ஓமந்தையிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி இறுதி முடிவின்றி தொடர்கின்ற நிலையில், வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரிக்கு எதிரில் தாண்டிக்குளத்தில், இந்த நிலையம் அமையக்கூடாது எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 July 2016
Posted in செய்திகள்
சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்.
சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான ளுநுஆ சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சுவிஸில் புதிதாக புகலிடம் வழங்குவதில் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 July 2016
Posted in செய்திகள்
கண் எதிரில் தமிழர்கள் கொல்லப்பட்டது எப்படி: பெண் சாட்சியம்
தனது கண் எதிரிலேயே தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு சுட்டுக்கொன்றனர் என்று இலங்கை திருகோணமலை குமாரபுரம் தமிழர்கள் படுகொலை வழக்கு விசாரணையில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். அதே நேரத்தில் தான் தப்புவதற்கு இராணுவ வீரர் உதவியதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இரு வாரங்களாக தொடர்ந்தும் இடம் பெற்று வரும் குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் பெண்கள் உட்பட சுமார் 40 பேர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 11 July 2016
Posted in செய்திகள்
விளக்க மறியலில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ
கருப்பு பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தி செய்யப்படதாமை காரணமாக சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு போலிஸ் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். Read more
Posted by plotenewseditor on 8 July 2016
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 7 July 2016
Posted in செய்திகள்
பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும்-த.சித்தார்த்தன் எம்.பி-
பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலையே அமைக்கப்பட வேண்டும். அதுவே பொருத்தமான இடமாகவும் விளங்குகின்றது. எமது மக்களின் விருப்பமாக இருக்கின்றதுடன் அதனாலேயே மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் ஏற்படும். இதனை விடுத்து சிலர் எங்கள் மக்கள்மீது அக்கறை கொள்வது போன்று நடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலையம் அமைவது தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற இழுபறி நிலைமை தொடர்பாகவே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், Read more
Posted by plotenewseditor on 7 July 2016
Posted in செய்திகள்
பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக ஊடகக்குழு-
பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக ஊடக குழுவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் தலைவர்களாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான அஜித் ரோஹன மற்றும் பிரியந்த ஜெயக்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் 2ம் திகதி பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷில் மீண்டும் குண்டு வெடிப்பு-
பங்களாதேஷில் ரம்ழான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்றுகாலை இவ்வாறு குண்டு வெடித்துள்ளது. மேலும் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்-
திருகோணமலை அலஸ்தோட்டப் பகுதியில் நேற்று இரவு துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பாலையூற்றைச் சேர்ந்த எம்.சித்ரவேல் மெனி (வயது 62) என தெரியவந்துள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அநுர சேனாசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு-
றக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாசநாயக்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது.
கொழும்பு கோட்டை பிரதம நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுர சேனாநாயக் தொடர்பில் பிணை மனு தாக்கல் செய்வதாயின் அதனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மலையாளபுர மக்கள் குடிநீரின்றி அவதி-
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட மலையாளபுரம் கிராம மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் தமக்கு உடனடியாக குடிநீர் விநியோகத் திட்டமொன்றை அமைத்துக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மலையாளபுரம் கிராமத்தில் வாழும் 130 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கிளிநொச்சி நகரிலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட மலையாளபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 130 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்ற போதிலும் 30 குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிக்கக்கூடிய திட்டமொன்று கடந்த மே 12ம்திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read more