solomoதென் பசிபிக் பெருங்கடலில் 8.0 ரிக்ட்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்த குறித்த பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பசுபிக் பிராந்தியத்தின் பவ்கேயின்வில்லே தீவிற்கும், சொலமன் தீவின் பிரதான மையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 167 கிலோமீற்றர் ஆழமான பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிராந்திய புவியியல் ஆய்வுப்படி 8.0 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த பிராந்தியங்களிலுள்ள இந்தோனேசியா, டோங்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நியூ கலிடோனியா பப்புவா நியூகினியா, வனுவாட்டு மற்றும் நவ்ரூ ஆகிய பகுதிகளில் 0.3 மீற்றர் உயரம் வரை சுனாமி அலை வீசுவதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிராந்தியங்களிகள் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டு சுனாமி அனர்த்த மையங்கள் தெரிவித்துள்ளன. தென் பசுபிக் பிராந்தியம், பப்புவா நியூகினியா மற்றும் சொலமன் தீவு பகுதிகள் அடிக்கடி நிலநடுக்கத்திற்குட்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.