Header image alt text

malayaam pongal 00தேசிய பொங்கல் விழா இன்று நுவரெலியா சினிசிட்டா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

அவருடன், இந்து கலாச்சார சிறைச்சாலைகள் புனரமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன், புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், Read more

vavuniya Forestவவுனியாவில் நேற்றுமுன்தினம் (13) இரவு 10.30 மணியளவில் கைக்குண்டு, இடியன் துப்பாக்கி என்பனவற்றுடன் காட்டில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகிய இருவரையும் ஓமந்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், Read more

thipaதனது ‘மக்கள் நலப் பணி’ குறித்த விரிவான அறிவிப்பை தான் நாளை திங்கள்கிழமை வெளியிடவுள்ளதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபா புதிய அரசியல் கட்சியை தொடங்க வேண்டுமென வலியுறுத்தி அவரது வீட்டின் முன்பாக சில அதிமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரண்ட வண்ணமுள்ளனர். Read more

vayalநாட்டில் தற்போது அதிகாலை வேளையில் நிலவும் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பினனர் குறைவடையும் சாத்தியமுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.பிரேமலால் தெரிவித்தார். 

தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிருடன் கூடிய காலநிலையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். ஏனெனில் தற்போது இந்தியாவூடாகச் செல்லும் காற்றே இலங்கைக்கும் கிடைக்கிறது. அக்காற்று குளிருடன் கூடிய உலர்காற்றாகும். Read more

batti 01தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்தே வாக்குகேட்டது.
ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றே நாங்கள் கேட்கின்றோம்.

அதனையே தமிழ் மக்கள் பேரவையும் கோருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more

sambanthan-dineshபுதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர். இருப்பினும் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார். அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்றும் நிறைவேறப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன  தெரிவித்தார். Read more

uraniயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள ,  ஊறணி கடற்பிரதேசம்,  இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுவதற்காக இன்று பொங்கல் தினத்தன்று ராணுவத்தினாரல் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தையொட்டி, இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. Read more

Varatchiஎதிர்வரும் தினங்களில் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கு சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரமவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. Read more