Header image alt text

solomoதென் பசிபிக் பெருங்கடலில் 8.0 ரிக்ட்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்த குறித்த பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பசுபிக் பிராந்தியத்தின் பவ்கேயின்வில்லே தீவிற்கும், சொலமன் தீவின் பிரதான மையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 167 கிலோமீற்றர் ஆழமான பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிராந்திய புவியியல் ஆய்வுப்படி 8.0 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த பிராந்தியங்களிலுள்ள இந்தோனேசியா, டோங்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நியூ கலிடோனியா பப்புவா நியூகினியா, வனுவாட்டு மற்றும் நவ்ரூ ஆகிய பகுதிகளில் 0.3 மீற்றர் உயரம் வரை சுனாமி அலை வீசுவதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read more

IMG_1718தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent – 2016” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், பூவரசன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் பூவரசு இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான சுற்றுவேலி, கடினபந்து துடுப்பாட்ட ஆடுகள நிர்மாணம் என்பவற்றின் திறப்பு விழா பூவரசன்குளம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் பூவரசு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாணசபை உறுப்பினர் திரு செ.மயூரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வினோ நோகராதலிங்கம், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), ஜனாதிபதியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு வாசலை, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் மற்றும் Read more

werererகிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசிக்கும் காராளசிங்கம் குலேந்திரன் என்னும் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வருகின்றார்.

குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி மாலை ஊற்றுப்புலத்தில் தனது சகோதரியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பின்னர் இரவாகியும் வீட்டிற்கு திரும்பாமையினால் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளனர். Read more

ranilநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை கூறவில்லை என்பதால், அது தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருக்காது என நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும், பிரித்தானியாவுடன் தனியான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். Read more

ezhuka thamilதமிழ் மக்கள் பேரவையால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எழுகதமிழ் நிகழ்வு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

fdfdfdமட்டக்களப்பு, நொச்சிமுனையைச் சேர்ந்த 35 வயதுடைய சுஜிதா தவசீலன் என்ற இளம் குடும்பப் பெண்ணைக் கடந்த இரு தினங்களாகக் காணவில்லை என, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று விட்டு வீடு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த வேளையிலேயே, இவர் காணாமல் போயுள்ளதாக, உறவினர்கள் தெரிவிக்கின்றனர். Read more

ertretrதிருகோணமலை பாலையூற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது நேற்றுமாலை 5.00 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை, காமினி திஸாநாயக்க மாவத்தையைச் சேர்ந்த மரக்கலுகே பிரியதர்ஷன என்பவருடைய முச்சக்கர வண்டிக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

sadsdஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மலையக இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் மலையகத்தில் மலையக இந்தியவம்சாவளி தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டனர். அவசர சட்டமூலம் ஜல்லிகட்டுக்கு ஒப்புதலை பெறுவதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருந்தாலும் அதற்கு மாபெரும் அழுத்தத்தை வழங்கிய மாணவர் படையணியை ஆதரிக்கும் வகையிலும் எவ்வித தடையுமின்றி ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. Read more

chinabay oilசீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டு த்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது.

வறட்சியை எதிர்கொள்வதற்காக மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு, இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் உள்ள சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த போதும், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எண்ணெய்க் குதங்களை மீள வழங்க மறுத்து வருகின்றனர். Read more