err43ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்ட ஒலிம்பிக் சுடரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் மற்றும் படையதிகாரிகள் ஏற்றிவைத்தார்கள்.

கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிய இந்த ஒலிம்பிக் சுடர் பயணம் செய்து விசுவமடு, புதுக்குடியிருப்பு, வட்டுவாகல் ஊடாக நேற்றுமாலை முல்லைத்தீவு அரச செயலகத்தை சென்றடைந்தது. இன்றுகாலை 9 மணியளவில் இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தேசியக்கொடியினை அரசாங்க அதிபரும், மாகாண கொடியினை வடக்கு மாகாண அமைச்சர் கந்தையா சிவநேசனும் விளையாட்டு கொடியினை 59ஆவது படைப்பிரிவின் படைத்துறை அதிகாரியும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டது. தொடர்ந்து 43 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வுக்கான ஒலிம்பிக்சுடர் அரசாங்க அதிபர் படைத்துறை அதிகாரி விளையாட்டு வீரர்களால் ஏற்றிவைக்கப்பட்டு முல்லைத்தீவு நகரில் இருந்து தண்ணீரூற்று ஊடாக நெடுங்கேணி சென்று அங்கிருந்து வவுனியா சென்றடையவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு குறித்த ஒலிம்பிக் சுடர் தாங்கிய வாகன அணி நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.