denmarkஇலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தை வலியுறுத்த வேண்டும் என்பதை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

டென்மார்க்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ட்ரோல்ஸ் ராவின்ஸ் மற்றும் டென்மார்க்கின் சோஷலிஷ ஜனநாயக கட்சியின் நிறைவேற்று உறுப்பினர் தர்மகுலசிஙகம் ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு பணம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தபோது குறித்த விடயத்தில் இணக்கம் ஏற்பட்டதாக தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் கல்வித் திட்டத்திலும், மனித உரிமை சாசனம் உள்வாங்கப்பட வேண்டும் என்ற விடயமும் தம்மால் வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.