caffe30 சதவீதப் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக மேற்கொள்ளப்பட்ட மாகாணசபைகள் திருத்தச் சட்டத்தின் ஊடாக, பெண்கள் அமைப்பு, சிவில் அமைப்புகள் மட்டுமன்றி முழு நாடும் பாரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. இந்தச் திருத்தச்சட்டத்தில், கூறப்படுகின்ற நோக்கமானது 30 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை,வேட்புமனுக்காக, சான்றுபகர்கின்றமையே ஆகும்.

ஆனாலும், ஏதேனும் வேட்புமனுப்பத்திரத்தில் குறித்த 30 சதவீதப் பெண்கள் தொகையானது உள்வாங்கப்படவில்லையானால், குறித்த வேட்புமனுவினை நிராகரிப்பதற்கு சட்டதிருத்தத்தில் எந்தவிதத்திலும் இடம் ஒதுக்கப்படவில்லை. அதற்கமைய, அவ்வாறான வேட்புமனுக்களை செயல் ரீதியாக நிராகரிப்பதற்கு, தெரிவத்தாட்சி அலுவலருக்கு முடியாது என, அவ்வமைப்பின் தேசிய கண்காணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணச் சபைகள் திருத்தச் சட்டத்தை பின் கதவினால் நிறைவேற்றிக்கொள்ள முயற்சியும் கைகூடவில்லை. அதுமட்டுமன்றி, மாகாணசபை தேர்தலை இரண்டு தடவைகளோ அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகளிலோ, நிச்சயமாக நடாத்த வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த திருத்தச் சட்டத்தின் மூலம், ஏராளமான தொழிநுட்ப ரீதியான பிரச்சினைகள் மாகாணசபைச் சட்டத்தில் எழுந்துள்ளன. உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள் போன்றே, மாகாணசபைத் தேர்தலையும் மிக நீண்டகாலத்துக்கு பிற்போடுவதற்கு, அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.