மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் இடம்பெறும்.
இறுதிநாளான 21ஆம் திகதியன்றே, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 18 December 2017
Posted in செய்திகள்
மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் இடம்பெறும்.
இறுதிநாளான 21ஆம் திகதியன்றே, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 18 December 2017
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் ஒருவகை காய்ச்சல் காரணமாக 9 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயத்தினை வடமாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர்கள் ஒருவகை வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவற்றுள் பெருபாலானோர் இன்ஃபுலுவன்சா வைரஸ் தாக்கதினாலேயே உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த வைரஸ் தொடர்பில் கொழும்பில் உள்ள மருத்துவமனைகளுக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Posted by plotenewseditor on 18 December 2017
Posted in செய்திகள்
மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன கடற்தொழிலாளர்களில் ஒருவர் இராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
மன்னார் பேசாலை பகுதியில் இருந்து நேற்றுக்காலை கடற்தொழிலுக்காக சென்ற இரு கடற்தொழிலாளர்கள், வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் பேசாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 18 December 2017
Posted in செய்திகள்
தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேடும் முகமாக பெகோ இயந்திரம் ஒன்றினை திருடி வந்து, கைவிடப்பட்ட முகாம் ஒன்றின் அருகில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் நபர் ஒருவர் கிணறு வெட்டுவதற்காக பெகோ இயந்திரம் ஒன்றினை அப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 December 2017
Posted in செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச வங்கியான பிராந்திய அபிவிருத்தி வங்கிக் கிளைகளிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 13 பேர், அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் ஒருவரே தமிழராவர். மற்றையவர்கள் அனைவருமே பெரும்பான்மையினர். ஆள்சேர்ப்பில் நிதியமைச்சு பாரிய பிழையைச் செய்துள்ளது என, இப்பகுதி இளைஞர், யுவதிகள், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் Read more
Posted by plotenewseditor on 18 December 2017
Posted in செய்திகள்
மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரசாக் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுக்காலை மலேஷியப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின்பேரில் அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 December 2017
Posted in செய்திகள்
தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. 1.4 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
முதன் முறையாக வெளிநாடு வாழ் சிலியர்களுக்கும் வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழமைவாதியும் முன்னாள் ஜனாதிபதியுமான செபாஸ்டியன் பினரா மற்றும் சோசியலிச கட்சியைச் சேர்ந்த அலேஜாந்த்ரோ கைலியர் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், 54 சதவிகித வாக்குகள் பினராவுக்கு பதிவாகின. Read more
Posted by plotenewseditor on 17 December 2017
Posted in செய்திகள்
வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான வெள்ளப்பாதிப்பை குறைக்கும் முகமான பிரதான வடிகால் அகலமாக்கும் செயற்றிட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. சு.காண்டீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more
Posted by plotenewseditor on 17 December 2017
Posted in செய்திகள்
இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய ரஷ்யா எடுத்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட, மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று அடுத்தவாரம் ரஷ்யா பயணமாக உள்ளது. ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த ஆகியோரே இந்தக் குழுவில் அடங்குகின்றனர். Read more
Posted by plotenewseditor on 17 December 2017
Posted in செய்திகள்
இலங்கைக்கான சீன தூதுவர் சியான்லியாங், (லுi ஓயைடெயைபெ) தமது பதவிக்காலம் முடிவடைந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015 பெப்ரவரி 24ஆம் திகதி இலங்கைக்கு வந்த ஹீ ஸியாங்லியானின், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இலங்கைக்கான சீன தூதுவராக செயற்பட்டுள்ளார். தமது பதவிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை அவர் செய்து முடித்துள்ளார். ஹீ ஸியாங்லியான், இலங்கையில் மிகவும் செல்வாக்கு மிக்க சீன பிரதிநிதியாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more